மூக்கை உடைத்து கொண்ட டிரம்ப், மஸ்க்! முக்கிய உத்தரவை நிறுத்தி வைத்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் அரசு ஊழியர்களை கொத்தாக வேலையை விட்டு அனுப்பும் திட்டத்தை அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் போட்டிருந்தனர். ஆனால் இப்படி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப எந்த அதிகாரமும் இல்லை என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இதனால் டிரம்பும், மஸ்க்கும் கடும் எரிச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மறுபுறம் அரசு ஊழியர்கள் தரப்பில் இந்த உத்தரவு கொண்டாடப்பட்டு வருகிறது.

US Trump

அமெரிக்க அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பேன் என்று டிரம்ப் பேசி வந்தார். இதனையடுத்து நடந்த தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார். எனவே, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க திறனாய்வு துறை (DOGE) எனும் புதிய துறையை உருவாக்கி, அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக போட்டார். சூட்டோடு சூடாக எலான் மஸக்கும் ஆட்குறைப்பு வேலையில் தீவிரமாக இறங்கினார்.

முதலில் அமெரிக்க பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மெயில் ஒன்று அனுப்பப்பட்டது. ஊழியர்கள் செய்த வேலை குறித்து வாரம் வாரம் ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டிருந்தது. அனுப்ப மறுப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். வேலையில் திருப்தி இல்லை என்றால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். ஆட்கள் அதிகமாக இருந்தாலும் வேலையிலிருந்து தூக்கப்படுவார்கள். எப்படி இருந்தாலும் வேலை பறிபோவது கன்பார்ம்.

எனவே பலரும் இதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். வட கலிபோர்னியாவின் மாவட்ட நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதி வில்லியம் அல்சுப் கொடுத்த உத்தரவு பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

அதாவது, அமெரிக்காவின் பணியாளர் மேலாண்மை அலுவலகம் (OPM), அரசு ஊழியர்களை நிர்வகிக்க மட்டுமே செய்கிறது. மாறாக அரசு ஊழியர்களை வேலைக்கு எடுக்கவும், அவர்களை வேலையிலிருந்து அனுப்பவும் யாருக்கும் அதிகாரம் கிடையாது. வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் இதற்காக ஒரு தீர்மானத்தை இயற்றி அதை சட்டமாக்குங்கள் என்று காட்டமாக கூறியிருக்கிறார். இதனால் டிரம்ப், மஸ்க் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

டிரம்பின் யோசனைகளுக்கு எதிராக உத்தரவுகள் வருவது இது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே இதுபோன்று பல உத்தரவுகள் வந்திருக்கின்றன. குறிப்பாக பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராக டிரம்ப் புதிய உத்தரவை போட்டிருந்தார். ஆனால் அவரது உத்தரவு செல்லாது என்று சமீபத்தில்தான் மற்றொரு மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக நீதிமன்றத்திடம் டிரம்ப் தரப்பு எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது.

சரி அரசு ஊழியர்களை ஏன் பணிநீக்கம் செய்ய டிரம்ப் துடிக்கிறார்? என்று பலருக்கும் கேள்வி எழுந்திருக்கலாம். இதற்கு 5 காரணங்களை டிரம்ப் தரப்பு முன்வைக்கிறது. இதுதான் அது.

1. அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைத்தல்
2. விசுவாசிகளை உள்ளே கொண்டு வருதல்
3. அரசு செலவுகளை குறைத்தல்
4. தனியார் மயம்
5. அரசியல் வியூகம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+