இந்தியாவை அவமானப்படுத்த நினைத்தாரே.. போகிற இடமெல்லாம் அசிங்கப்படும் டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே!
நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியின் போது மேடையில் தோன்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பார்த்ததும் மக்கள் கோஷங்களை எழுப்பி அவருக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்தனர். கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜானிக் சின்னர் மோதிய இந்த போட்டி ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
ஸ்டேடியத்தின் திரைகளில் டிரம்ப் தோன்றியபோது, ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை சத்தமாக வெளிப்படுத்தினர். ஏபிசி ஒளிபரப்பில் டிரம்ப் கையசைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தாலும், அரங்கத்தில் எழுந்த சத்தங்கள் பதிவாகவில்லை. பின்னர், இஎஸ்பிஎன் ஒளிபரப்பில் அவர் மீண்டும் தோன்றியபோது, ஓஒஓ.. ஊஊஊ என்று அவரை விமர்சிக்கும் விதமாக சத்தங்கள் தெளிவாகக் கேட்டன.'

டிரம்ப் மீதான கோபத்திற்கு என்ன காரணம்?
போட்டி தாமதமானதே டிரம்ப் மீதான கோபத்திற்குக் காரணம். 24,000 பேர் அமரக்கூடிய ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர். டிரம்ப் வருகையையொட்டி, அமெரிக்க ரகசிய சேவை மற்றும் பிற மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.
மதியம் 2 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த போட்டி, பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. புரூக்ளினைச் சேர்ந்த கெவின் என்ற தனியார் பங்கு நிதி ஊழியர், ஒன்றரை மணி நேரம் காத்திருந்ததாகவும், இந்த தாமதத்திற்குக் காரணம் டிரம்ப் தான் என்றும் ஊடகங்களிடம் கூறினார். நூறு சதவீதம் இந்த விவகாரத்திற்கு டிரம்ப்தான் காரணம். மிகவும் சுயநலம்.. அவரை நாங்கள் வெறுக்கிறோம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும், என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
டிரம்ப் இந்தியா மோதல்
இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்தான் அமெரிக்காவிலேயே டிரம்பிற்கு இந்த அவமானம் நேர்ந்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளின் இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார். உக்ரைன் போரை முன்னிட்டு ரஷ்யா மற்றும் அதன் எண்ணெய் கொள்முதல் நாடுகள் மீது தடைகளை அதிகரிக்க அவர் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா மீது கடுமையான தடைகள் வரும் நாட்களில் வரலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க போவதாக டிரம்ப் பலமுறை எச்சரித்து இருந்தார். ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை அவர் தொடர்ந்ததால் இந்தத் தடைகளை விதிக்காமல் இருந்தார். ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான்












Click it and Unblock the Notifications