வென்றுவிட்டோம்.. அவசர அவசரமாக வெற்றியை அறிவித்த டிரம்ப்.. பின்னணியில் இருக்கும் பரபரப்பு காரணம்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வென்றுவிட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் இப்படி அவசர அவசரமாக முடிவை அறிவிக்க முக்கியமான காரணம் இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில், அதிபர் டிரம்ப் தான் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார். நாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம்.

எங்களை பொறுத்தவரை வெற்றி உறுதியாகிவிட்டது. இதில் எதிர்க்கட்சிகள் முறைகேடு செய்கிறது, என்று டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதோடு, தேர்தலில் மேலும் வாக்குகளை சேர்ப்பதை நிறுத்த வேண்டும். புதிய தபால் வாக்குகளை லிஸ்டில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும். அவ்வளவுதான் தேர்தல் முடிந்துவிட்டது. இதுவரை வந்த முடிவுகளின்படி நாங்கள் வென்றுவிட்டோம், என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் இப்படி முன்கூட்டியே வெற்றியை அறிவித்து, சர்ச்சையை கிளப்ப காரணம் இருக்கிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

தற்போது வரை வெளியாகி உள்ள அமெரிக்க தேர்தல் முடிவுகளில் பிடன்தான் முன்னிலை வகிக்கிறார். பிடன் மொத்தமாக 238 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். மாறாக டிரம்ப் 213 வாக்குகளை பெற்றுள்ளார். இன்னும் சில தொகுதிகளில் மின்னணு வாக்குகள் எண்ணி முடிக்கப்படவில்லை. இங்கு மின்னணு வாக்குகளில் டிரம்ப் முன்னிலை பெற வாய்ப்புள்ளது. அதேபோல் இன்னும் பல தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்படவில்லை.

தபால் வாக்குகள்

தபால் வாக்குகள்

இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் முன் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்க டிரம்ப் முடிவு செய்து உள்ளார். தபால் வாக்குகள் எண்ணப்பப்பட்டால் அதில் தான் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் டிரம்ப் இப்படி வெற்றியை முன் கூட்டியே அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் பதிவாகி உள்ள 160 மில்லியன் வாக்குகளில் 101 மில்லியன் வாக்கு தபால் மூலம் பதிவு செய்யப்பட்டது.

பெரும்பான்மை

பெரும்பான்மை

இதில் 60%க்கும் அதிகமான தபால் வாக்கு ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வாக்காளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்கு ஆகும். குடியரசு கட்சியினர் அதிக அளவில் மின்னணு வாக்கும், ஜனநாயக கட்சியினர் அதிகமாக தபால் வாக்கும் பதிவு செய்துள்ளனர். தபால் வாக்குகள் இனிமேல்தான எண்ணப்படும். இந்த வாக்குகளை முழுமையாக எண்ணி முடித்தால் தற்போது வெளியாகி இருக்கும் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்புள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டால் இழுபறி நீடிக்கும் பல மாகாணங்களில் பிடன் வெற்றிபெறுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

மாற்றினார்

மாற்றினார்

இதனால்தான் தபால் வாக்குகளின் முடிவுகள் வருவதற்கு முன் தாங்கள் வென்றுவிட்டோம்.. இனிமேல் தபால் வாக்குகளை கணக்கில் எடுக்க வேண்டாம் என்று டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் டிரம்ப் கோரிக்கையை எந்த மாகாணமும் ஏற்காது. தொடர்ந்து கடைசி வாக்கு வரை எண்ணப்படும். அப்போது பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் மாறும். டிரம்ப் முன்னிலை வகிக்கும் பல தொகுதியில் தோல்வி அடைய வாய்ப்புள்ளது.

தோல்வி அடைவார்

தோல்வி அடைவார்

இதனால் தபால் வாக்குகள் மூலம் தான் தோல்வி அடைந்தால் அதை நிராகரிக்கும் பொருட்டு டிரம்ப் இப்போதே வெற்றியை அறிவித்துள்ளார். பாருங்கள் தபால் வாக்கில் முறைகேடு நடந்துவிட்டது.. மின்னனு வாக்கில் நான்தான் வென்றேன். தபால் வாக்கில் மோசடி செய்துவிட்டனர்... அதனால் இதை ஏற்க மாட்டேன் என்று டிரம்ப் கூற வாய்ப்பு உள்ளது. இதனால்தான் இப்போதே அவர் வெற்றியை அறிவித்துள்ளார்.

ஏற்க மாட்டார்

ஏற்க மாட்டார்

கண்டிப்பாக தோல்வி அடைந்தால் டிரம்ப் எளிதாக தனது இருக்கையை விட்டுக்கொடுக்க மாட்டார். கண்டிப்பாக இவர் பெரிய பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது. தேர்தலில் முறைகேடு நடக்க போகிறது என்று கூறி கடந்த மூன்று மாதமாக தனது பின்தொடர்பாளர்களை இவர் ஏற்கனவே தயார் செய்துவிட்டார்..இதனால் முழுமையான முடிவு வந்தபின் டிரம்ப் கோர்ட்டுக்கு படை எடுக்கவோ, வேறு பிரச்சனைகளை செய்யவோ வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+