கைகொடுக்காத கமலா மேஜிக்.. டிரம்பிற்கு உதவிய ஹவுடி மோடி.. 40 வருட டெக்ஸாஸ் கோட்டை.. அசைக்க முடியுமா!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் கோட்டையாக கருத்தப்பட்ட டெக்ஸாஸ் மாகாணத்தில் அதிபர் டிரம்ப் இந்த முறையும் முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் சில மாகாணங்களில் என்ன பிரச்சாரம் செய்தாலும் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் மாறாது. சில மாகாணங்களில் இருக்கும் மக்கள் என்ன நடந்தாலும் ஒரே கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்.
உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் மக்கள் எப்போது குடியரசு கட்சிக்குத்தான் வாக்களிப்பது வழக்கம். கடந்த 40 வருடமாக டெக்ஸாஸ் மாகாணம் குடியரசு கட்சியின் கோட்டையாக இருக்கிறது.

என்ன நடந்தது
கடந்த 2016 தேர்தலில் டெக்ஸாஸ் மாகாணத்தில் டிரம்ப் மிக எளிதாக வெற்றிபெற்றார். இந்த முறையும் டிரம்ப் இங்கு எளிதாக வெற்றிபெறுவார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை இங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. முதல் கட்ட தேர்தல் முடிவுகளின் படி ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனை முந்தி குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் இங்கு முன்னிலை வகித்து வருகிறார்.

முன்னிலை
இங்கு பைடன் 47.8% வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்து உள்ளார். ஆனால் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 50.7% வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். இது முதற்கட்ட முடிவு என்றாலும் கூட.. பைடனுக்கு இந்த லீடிங் அதிர்ச்சி அளித்துள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில் ஒன்றாக டெக்ஸாஸ் பார்க்கப்படுகிறது. கலிபோர்னியாவிற்கு அடுத்து இந்தியர்கள் வசிக்கும் மிகப்பெரிய மாகாணங்களில் இதுவும் ஒன்று. டெக்ஸாஸ் மாகாணத்தில் வெற்றிபெறாமல் ஒருவர் அதிபர் தேர்தலில் வெற்றிபெறவே முடியாது.

வெற்றி முடியாது
இதனால்தான் இங்கு அதிபர் டிரம்ப், பைடன் இருவரும் பெரிய அளவில் கவனம் செலுத்தினார்கள். துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை பைடன் அறிவித்ததற்கு கூட இது ஒரு காரணம். இங்கு இருக்கும் இந்தியர்களின் வாக்குகளையும் மற்ற பிற நாட்டு பூர்வீகத்தை கொண்ட மக்களின் வாக்குகளையும் கவர வேண்டும் என்றுதான் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

டெக்ஸாஸ்
அதேபோல் கமலா ஹாரிஸ் முழுக்க முழுக்க டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் பிரச்சாரம் செய்தார். இங்கு பைடன் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் இங்கு அவர் அதிக அளவில் பணத்தை வாரி இறைத்தார். கடந்த வாரம் மட்டுமே இங்கு கமலா ஹாரிஸ் மூன்று பெரிய பொதுக்கூட்டங்களை நடத்தினார். இந்த நிலையில்தான் தற்போது முதல் கட்ட வாக்குகள் பைடன் - கமலாவிற்கு எதிராக வந்துள்ளது.கமலா மேஜிக் இங்கு பெரிதாக வேலை செய்யவில்லை.

டிரம்ப்
இதனால் பைடன் கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். இங்கு இருக்கும் இந்தியர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்றுதான் டிரம்ப்.. இந்திய பிரதமர் மோடியை இங்கே அழைத்து வந்து ஹவுடி மோடி நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம்.. தேர்தல் பிரச்சாரம் போலவே டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டனில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சி தற்போது டிரம்பிற்கு மிகப்பெரிய அளவில் உதவி உள்ளது.

ஆனால் என்ன
கமலா ஹாரிஸ் என்ற இந்திய வம்சாவளி பெண் இங்கு பிரச்சாரம் செய்தது.. பைடனுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. கடந்த முறை ஹாரிஸ் பெற்ற அதே அளவு வாக்குகளைதான் பைடன் பெற்றுள்ளார். இதனால் டிரம்ப் இங்கு வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications