பொறுமையிழந்த டிரம்ப்.. அதிபர் தேர்தலில் இன்றே முடிவுகள் வராது.. சில நாட்கள் கூட ஆகும்..ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் முடிவடைந்தாலும் கூட.. இன்றே தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்க முடியாது. பொதுவாக அமெரிக்க தேர்தல் முடிவுகள் தேர்தல் நாளின் இரவிலேயே வந்துவிடும். ஆனால் இந்த முறை தேர்தல் முடிவுகள் அப்படி இருக்காது.

2020 அமெரிக்க தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் முன்னாள் துணை அதிபர் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தற்போது நடந்து வரும் தேர்தல் இன்னும் 3 மணி நேரங்களில் முடிந்துவிடும். அமெரிக்க நேரப்படி இன்னும் 3 மணி நேரங்களில் தேர்தல் முடிந்து சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று இருக்கும்

தபால் வாக்கு

தபால் வாக்கு

பொதுவாக அமெரிக்க அதிபர் தேர்தலில்.. தேர்தல் முடிந்த அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும். அமெரிக்காவின் புதிய அதிபர் யார் என்று தேர்தல் நாளின் இரவிலேயே தெரிந்துவிடும். ஆனால் இந்த முறை முடிவுகளை அப்படி தெரிந்து கொள்ள முடியாது. இந்த முறை முழுமையான தேர்தல் முடிவுகள் வர ஒரு வாரம் கூட ஆகலாம்.. என்று கூறுகிறார்கள்.

ஏன்

ஏன்

இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா காரணமாக நிறைய தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. கிட்டத்தட்ட 150 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் இந்த முறை பதிவாகி உள்ளது. இதில் 101 மில்லியன் வாக்குகள் தபால் வாக்குகள். இதில் நேரடியாக பதிவு செய்த வாக்குகளை மின்னணு வாக்குகள் என்பதால் அதே நாளில் எண்ணிவிட முடியும். ஆனால் தபால் வாக்குகளை அப்படி எண்ண முடியாது.

ஏன் எண்ண முடியாது

ஏன் எண்ண முடியாது

100 மில்லியன் தபால் வாக்குகளில் பல பக்கங்கள் இருக்கும்.ஒரே பக்கத்தில் தபால் வாக்குகள் முடியாது. இதில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை வாக்குகளும் பதிவு செய்யப்படும். பல மாகாணங்களில் நீதிபதிகள், உள்ளூர் பிரநிதிகள், கவுண்டி தலைவர்களுக்கும் இதே நேரத்தில் தேர்தல் நடக்கிறது. அனைத்திற்கும் ஒரே தபால் வாக்கில்தான் வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தபால் வாக்குகள் பல பக்கங்களுக்கு நீளும்.

மாற்றம்

மாற்றம்

இதை எல்லாம் வகை பிரித்து எண்ணுவதற்கு பல நாட்கள் ஆகும். அதேபோல் சில மாகாணங்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே மின்னணு வாக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள்தான் பல மாகாணங்களில் ஊக்கு விக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக அனைத்து வாக்குகளையும் எண்ண பல நாட்கள் ஆகலாம். அமெரிக்க பெடரல் விதிப்படி சில மாகாணங்களில் டிசம்பர் 8 வரை கூட தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம்.

முடிவுகள்

முடிவுகள்

மொத்தம் இருக்கும் 50 மாகாணங்களில் 8-9 மாகாணங்களில் மட்டுமே தேர்தல் நாளின் இரவிலேயே முடிவுகள் அறிவிக்கப்படும். மற்ற மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நேரம் எடுக்கும். இதனால் ஒரே நாள் இரவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரிய மாற்றம் வந்துவிடாது. அமெரிக்க அதிபர் டிரம்ப்.. முதல்கட்ட முடிவுகள் தனக்கு சாதகமாக வந்தால் வாக்குப்பதிவை நிறுத்த சொல்வார் என்றும் பீதி நிலவி வருகிறது.

பீதி

பீதி

அதாவது, முதல் கட்ட முடிவுகள் தனக்கு சாதகமாக வந்தால் .. வாக்கு எண்ணியது போதும் என்று 12 மணிக்கு அறிவிப்பார் என்ற அச்சம் உள்ளது. இந்த விஷயத்தை டிரம்ப் சில முறை சூசகமாக தெரிவித்துள்ளார். ஆனால் எந்த மாகாணத்திலும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த விதி அனுமதிக்கவில்லை. தேர்தல் நாளுக்கு முன்பு வரை பதிவு செய்யப்பட அனைத்து தபால் வாக்குகளையும் தேர்தல் நாளில் பதிவான மின்னணு வாக்குகளையும் கண்டிப்பாக எண்ண வேண்டும் என்று விதி உள்ளது.

மாற்றம் வரும்

மாற்றம் வரும்

இதனால் கண்டிப்பாக அனைத்து வாக்குகளும் எண்ணப்படும். டிரம்ப் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மாகாணங்கள் டிரம்பின் பேச்சுக்கு செவி மடுக்காது. இதனால் அனைத்து தபால் வாக்குகளும் கண்டிப்பாக கடைசிவரை எண்ணப்படும். மொத்தத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+