அமெரிக்க அதிபர் தேர்தல்.. 213 வாக்குகளுடன் வேகமாக முன்னேறும் டிரம்ப்.. பிடனுக்கு 237.. கடும் போட்டி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் அதிக எலக்ட்ரல் வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். ஆனால் மொத்த வாக்குகள் அடிப்படையில் ஜோ பிடனுக்கும்-டிரம்புக்கும் பெரிய இடைவெளி இல்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி இரண்டு அதிபர் வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு 237 எலக்ட்ரல் வாக்குகள் இதுவரை கிடைத்துள்ளது. இன்னொரு பக்கம் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்பிற்கு 213 எலக்ட்ரல் வாக்குகள் கிடைத்துள்ளது.

எத்தனை

எத்தனை

அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். தற்போது பிடன் வெற்றிபெறுவதற்கு 33 வாக்குகளை பெற வேண்டும். அதேபோல் டிரம்ப் வெற்றி பெற 57 வாக்குகளை பெற வேண்டும். டிரம்ப் இதில் வேகமாக முன்னேறி வருவதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் முடிவுகள் மாறலாம். அதே சமயம் மக்கள் வாக்குகள் அடிப்படையில் ஜோ பிடனுக்கும்-டிரம்புக்கும் பெரிய இடைவெளி இல்லை. 49.8% மக்கள் வாக்குகளை பெற்றுள்ளார் ஜோ பிடன், 48.6% மக்கள் வாக்குகள் டிரம்ப் பெற்றுள்ளார்.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 55 எலக்டர்ஸ் உள்ளனர். மொத்தமாக எலக்டர்ஸ் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இதுவரை வெற்றிபெற்றுள்ளனர்.

 எலக்டர்ஸ்

எலக்டர்ஸ்

இந்த எலக்டர்ஸ் அளிக்கும் வாக்குகள்தான் எலக்ட்ரல் ஓட்டு என்று அறிவிக்கப்படும். மொத்தமா 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் எலக்ட்ரல் வாக்குகளுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கலாம். பொதுவாக ஒரு மாகாணத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை பொறுத்தே எலக்ட்ரல் வாக்குகளும் பெரும்பாலும் அளிக்கப்படும்.

எப்படி வழங்கப்படும்

எப்படி வழங்கப்படும்

உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் 51% வாக்குகளை மக்கள் யாருக்கு அளிக்கிறார்களோ..அவர்களே பெரும்பாலும் வெற்றிபெறுவார்கள். அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அந்த வேட்பளாருக்கே வழங்கப்படும். ஆனால் சில சமயம் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர் கூட எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

வாய்ப்புள்ளது

வாய்ப்புள்ளது

அதாவது ஒரு வேட்பாளருக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்து இருந்தாலும் கூட, கூடுதல் எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வேறு வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கடந்த 5 தேர்தலில் 2ல் வெற்றிபெற்ற அதிபர்கள் இப்படி குறைந்த மக்கள் வாக்குகளை பெற்று, அதிக எலக்ட்ரல் வாக்குகள் மூலம் வெற்றிபெற்றவர்கள். 2016ல் டிரம்பிற்கு ஹிலாரியை விட 3 மில்லியன் மக்கள் வாக்கு குறைவாக இருந்தது.. ஆனாலும் எலக்ட்ரல் வாக்கு அதிகமாக இருந்ததால் டிரம்ப் வெற்றிபெற்றார்.

வெற்றி

வெற்றி

தற்போதும் அதேபோல் இரண்டு அதிபர் வேட்பாளருக்கும் இடையே நெக் டு நெக் போட்டி நிலவி வருகிறது. பெரும்பாலும் மக்கள் அதிகம் வாக்களிக்கும் வேட்பாளருக்கே எலக்ட்ரல் வாக்குகள் விழும் என்பதால் சென்ற முறை நடந்தது போல இந்த முறை நடக்க வாய்ப்பு இல்லை. இந்த முறை மக்கள் வாக்கும் ஏறக்குறைய டிரம்ப் - பிடன் இடையே ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது... இதனால் அதிபர் தேர்தலில் கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டாலும் ஏற்பட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+