அசால்ட்டாக நியூயார்க்கை பிடித்த பிடன்.. டிரம்பை காலி செய்த "கொரோனா-அலை".. பெரிய அரசியல் பாடம்!
நியூயார்க்: அமெரிக்காவில் முக்கிய மாகாணமான நியூயார்க்கில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார். இங்கு எதிர்பார்த்தபடி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. 160 மில்லியன் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின் படி 98 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். 92 வாக்குகளை பெற்று டிரம்ப் பின்னடைவை சந்தித்து உள்ளார்.

தோல்வி
குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் நியூயார்க் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். நியூயார்க் தொகுதியில் 2,172,914 வாக்குகளை, அதாவது 63% வாக்குகளை பெற்று பிடன் வெற்றிபெற்றுள்ளார். டிரம்ப் 1,222,211 வாக்குகளை, அதாவது 36% வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

ஆதிக்கம்
இங்கு இருக்கும் இரண்டு செனட் சபையிலும் பிடனின் ஜனநாயக கட்சி முன்னிலை வகிக்கிறது... முழுக்க முழுக்க நியூயார்க்கில் பைடன்தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளார். இது எப்போதும் ஜனநாயக கட்சியின் கோட்டைதான். இங்கு இருக்கும் 55% வாக்காளர்கள் ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா
நியூயார்க்கில் முதல் கொரோனா கேஸ் வந்து கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அங்கு கடுமையான எதிர்ப்பு அலை நிலவியது. கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று கடுமையான எதிர்ப்பு அலை அவருக்கு எதிராக நிலவி வந்தது. மக்கள் டிரம்ப் மீது கோபத்தில் இருந்தனர் என்றுதான் கூற வேண்டும்.

கொரோனா
இந்த நிலையில் நேரம் பார்த்து டிரம்பை நியூயார்க் மக்கள் வீழ்த்தி உள்ளனர். அமெரிக்காவில் இந்த தேர்தல் முழுக்க கொரோனா அதிருப்தி அலை டிரம்பிற்கு எதிராக நிலவியது. கொரோனாவை எப்படி அணுகினார். அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை எப்படி சரி செய்தார் என்ற எதிர்ப்பு அலை டிரம்பிற்கு எதிராக நிலவியது. தற்போது மக்களின் இந்த எதிர்ப்பு அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.

பாடம்
அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுக்க கொரோனா அதிருப்தி ஒரு வகையில் தேர்தல் முடிவுகளை மாற்றுகிறது. நியூசிலாந்தில் ஜெசிந்தா வெற்றிபெற அவர் கொரோனாவை கட்டுப்படுத்தியது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அடுத்த ஒரு வருடம்.. உலகம் முழுக்க நடக்கும் பல்வேறு தேர்தலில் கொரோனா முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது... கொரோனா வைரஸ் தானே என்று அலட்சியமாக இல்லாமல் அரசியல் கட்சிகள் அமெரிக்க அதிபர் தேர்தலை பார்த்து பாடம் கற்க வேண்டும்.












Click it and Unblock the Notifications