இடியாக இறங்கிய செய்தி.. அரிசோனா தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப்.. அதிகாலை 2.30 மணிக்கு பறந்த போன் கால்!
நியூயார்க்: அரிசோனா மாகாணத்தில் தோல்வி அடைந்ததாக வெளியான செய்திகளை நேற்று அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து பலருக்கு கோபமாக போன் செய்து பேசி இருக்கிறார். அதிகாலை 2.30 மணிக்கு நேற்று வெள்ளை மாளிகை இதனால் பதற்றத்துடன் காணப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கிறார். வெறும் 214 எலக்ட்ரல் வாக்குகளை மட்டுமே வென்று இருக்கும் டிரம்ப் தோல்வி அடையும் நிலையில் உள்ளார். இவர் 270 வாக்குகளை பெற வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.
264 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று இருக்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன்.. இன்னும் 6 வாக்குகளை வெற்றி பெற்றால் போதும்.. 270 வாக்குகளை வென்று அதிபராகிவிடுவார்.

என்ன நடந்தது
நேற்று தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போதெல்லாம்.. டிரம்ப் மிகவும் நம்பிக்கையாகவே இருந்தார். டிரம்ப் மட்டுமல்ல டிரம்பிற்கு விசுவாசியாக இருக்கும் பல கவுண்டி தலைவர்கள், செயலாளர்கள், அதிகாரிகள், முன்னாள் ராணுவ, நீதித்துறை உறுப்பினர்கள், வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலர் நேற்று டிரம்புடன் மாலையில் இருந்தே இருந்தனர்.

என்ன நடந்தது
நேற்று தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போதெல்லாம்.. டிரம்ப் மிகவும் நம்பிக்கையாகவே இருந்தார். டிரம்ப் மட்டுமல்ல டிரம்பிற்கு விசுவாசியாக இருக்கும் பல கவுண்டி தலைவர்கள், செயலாளர்கள், அதிகாரிகள், முன்னாள் ராணுவ, நீதித்துறை உறுப்பினர்கள், வெள்ளை மாளிகை அதிகாரிகள் பலர் நேற்று டிரம்புடன் மாலையில் இருந்தே இருந்தனர்.

கூட்டம் நடந்தது
வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் இவர்கள் மொத்தமாக கூடி தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தனர். அதிபர் டிரம்பின் தேர்தல் ஆலோசகர் ஜேசன் மில்லரும் இங்குதான் இருந்தார். தொலைக்காட்சியிலும், இணையத்திலும் முடிவுகள் வரும் முன் ஜேசன்தான் டிரம்பிற்கு முன் கூட்டியே முடிவுகளை அறிவித்து வந்தார். அறையில் இருந்த பெரிய திரையில் உள்ள அமெரிக்க மேப்.. சிவப்பு, நீலம் என்று வெற்றிக்கு தகுந்தபடி மாறிக்கொண்டு இருந்தது.

மாறியது
அப்போதுதான் டிரம்பிற்கு அந்த செய்தி இடியாக வந்து இறங்கியது.. அரிசோனாவில் டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார் என்று பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. புளோரிடாவால் ஸ்விங் ஆகி வென்ற மகிழ்ச்சியில் இருந்த டிரம்பிற்கு இது இடியாக மாறியது. காரணம்.. 2016ல் டிரம்ப் வென்று.. இந்த முறை பிடனிடம் இழக்கும் முதல் மாகாணமாக அரிசோனா மாறியது. இந்த முடிவை டிரம்ப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குழப்பம்
அதே சமயம் ஜேசன் மில்லருக்கும் டிரம்ப் தோல்வி குறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. வேறு எந்த சேனலிலும் டிரம்ப்பின் அரிசோனா தோல்வி குறித்து அறிவிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த டிரம்ப்.. அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு அரிசோனா அதிகாரிகளுக்கு போன் செய்து பேசி இருக்கிறார். அரிசோனா கவர்னர் தொடங்கி தேர்தல் பொறுப்பாளர் வரை பலரிடம் கோபமாக கத்தி இருக்கிறார்.

ஏன் இப்படி
தோல்வி உறுதியா என்று சோதித்துள்ளார். ஏனென்றால் அரிசோனா.. 11 வாக்குகளை கொண்ட கொஞ்சம் காஸ்ட்லியான தொகுதி. அதிலும் ஸ்விங் தொகுதி. 2016ல் இதை கைப்பற்ற டிரம்ப் படாதபாடு பட்டார். ஆனால் இந்த தொகுதியில் பிடன் வென்றுவிட்டார் என்று பாக்ஸ் நியூஸ் அறிவித்தது.. இதுதான் டிரம்ப்பை சீண்டியது. இதனால் கோபம் அடைந்த டிரம்ப்பின் ஆலோசகர் ஜேசன் மில்லர்.. டிவிட்டரில் நேரடியாக பாக்ஸ் நியுஸிடமே தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

செம சண்டை
ஆனால் பாக்ஸ் நியுஸும் விட்டுக்கொடுக்காமல்.. அரிசோனாவில் டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார் என்று மீண்டும் உறுதிப்படுத்தியது. இதை கேட்டதும் டிரம்ப் கூடாரம் கொஞ்சம் ஆடிப்போனது. காரணம் செய்தியை அறிவித்தது பாக்ஸ் நியூஸ் . டிரம்பிற்கு நெருக்கமானது என்று கருதப்படும் செய்தி நிறுவனம் இது. டிரம்ப் மகனும், பாக்ஸ் நியூஸ் தலைமை அதிகாரியும் நண்பர்கள் வேறு. ஆனாலும் டிரம்பின் அரிசோனா தோல்வியை பாக்ஸ் நியூஸ் உறுதி செய்தது.

உறுதியான தோல்வி
அதற்கு பின் வரிசையாக மற்ற ஊடகங்களும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் டிரம்பின் அரிசோனா தோல்வியை உறுதி செய்தது. ஆம் அரிசோனா டிரம்ப் கையைவிட்டு போனது உறுதியானது. வெள்ளை மாளிகையின் கிழக்கு அறை இதனால் லேசான ஆட்டம். டிரம்ப் தோல்வி அடைய வாய்ப்புள்ளது என்ற உண்மை பல அதிகாரிகளுக்கு அப்போதுதான் புரிய தொடங்கியது.

பிரஸ் மீட்
இதனால் கோபம் அடைந்த டிரம்ப்தான் நேற்று 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தேர்தலில் முறைகேடு நடக்கிறது என்று புகார் வைத்தார். ஆனால் இதற்கு பின் மிச்சிகன், விஸ்காஸ்சின் மாகாணங்களையும் டிரம்ப் இழந்தார்.. இந்த தொடர் சறுக்கல்.. தன்னுடைய தோல்வியை உறுதிப்படுத்தவே.. தற்போது வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளார். அடுத்தடுத்த தோல்வி காரணமாக டிரம்பின் கூடாரம் கலையிழக்க தொடங்கி உள்ளது.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications