பதறிப்போய்.. நடுஇரவில் புலம்பிய டிரம்ப்.. சர்ச்சை கருத்து.. நடவடிக்கை எடுத்த டிவிட்டர்.. என்ன ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய தபால் வாக்குகளை கொண்டு வந்து முறைகேடு செய்கிறார்கள் என்று அதிபர் டிரம்ப் புகார் வைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மின்னணு வாக்கு பதிவில் பல இடங்களில் முன்னிலை வகித்த டிரம்ப்.. தற்போது தபால் வாக்குகளால் கடுமையான பின்னடைவை சந்திக்க தொடங்கி உள்ளார்.

தற்போது நிலவரப்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

 என்ன நிலையில்

என்ன நிலையில்

இந்த நிலையில் தபால் வாக்குகளில் தான் தோல்வி அடைகிறோம் என்பதை தெரிந்து கொண்ட டிரம்ப்.. மீதம் இருக்கும் தபால் வாக்குகளை எண்ண கூடாது என்று கோரிக்கை வைத்து உள்ளார். மிச்சிகான், விஸ்கான்சின் மாகாணங்களில் முன்னிலை வகித்து வந்த டிரம்ப்..கடைசியில் தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்து தோல்வி அடைந்தார்.

 கருத்து

கருத்து

இதனால்தான் நேற்று இரவில் இருந்து தபால் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார். நேற்று இவர் செய்த சில டிவிட்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.. அதில், பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். நார்த் கரோலினா, ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். அங்கு நான் முன்னிலை வகிக்கிறேன்,.

 தபால்

தபால்

இங்கு தபால் வாக்குகளை வைத்து முறைகேடு செய்ய பார்க்கிறார்கள். அதேபோல் மிச்சிகனிலும் தபால் வாக்குகளை வைத்து முறைகேடு செய்துள்ளனர். தபால் வாக்குகளை பதுக்கி வைத்து.. தற்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வருகிறார்கள். உடனே பென்சில்வேனியா உள்ளிட்ட 4 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்.

மோசம்

மோசம்

நாங்கள் பென்சில்வேனியாவில் வெற்றிபெற போகிறோம். ஆனால் அங்கு இருக்கும் செயலாளர் இன்னும் பல மில்லியன் தபால் வாக்கு மீதம் உள்ளது என்கிறார். இது ஏமாற்று வேலை. மிச்சிகனிலும் இதேபோல் புதிய தபால் வாக்குகளை கண்டுபிடித்து அதை முறையின்றி கணக்கில் சேர்க்கிறார்கள். பென்சில்வேனியாவில் எனக்கு ஆதரவான 5 லட்சம் வாக்குகளை காணவில்லை.

மிச்சிகன்

மிச்சிகன்

மிச்சிகனில் நடந்தது போல பென்சில்வேனியாவில் என்னுடைய வெற்றியை மறைய வைக்க திட்டமிடுகிறார்கள். என்னுடைய வெற்றியை பறிக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டிரம்ப் நேற்று இரவு முழுக்க புலம்பி உள்ளார்.

 நீக்கியது

நீக்கியது

டிரம்ப் இப்படி செய்த டிவிட்க்கள் எல்லாமே தவறானது, அல்லது பொய்யானது. இதனால் டிவிட்டர் நிறுவனம்.. டிரம்பின் பெரும்பாலான டிவிட்களை மொத்தமாக நீக்கி உள்ளது. டிரம்ப் டிவிட்கள் மக்களை தவறாக வழி நடத்துகிறது என்று டிவிட்டர் நிறுவனம் புகார் வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+