இது ஏமாற்று வேலை.. நாங்கள் வென்றுவிட்டோம்.. கோர்ட்டுக்கு செல்வோம்.. டிரம்ப் பரபரப்பு பேச்சு!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் நாங்கள் ஏற்கனவே வென்றுவிட்டோம், தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.தற்போது 238 எலக்ட்ரல் வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 213 வாக்குகளுடன் குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் முன்னேறி வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வரும் நிலையில் அதிபர் டிரம்ப் தற்போது பேட்டி அளித்து வருகிறார். வெள்ளை மாளிகையிலிருந்து டொனால்ட் டிரம்ப் உரையாற்றி வருகிறார்.

டிரம்ப் உரை
டிரம்ப் தனது உரையில் அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். பல மில்லியன் மக்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். நமக்கு வாக்களித்துள்ளனர். சில குழுக்கள் நமது உரிமையை பறிக்க நினைக்கிறது. வாக்களிக்கும் உரிமையை பறிக்க நினைக்கிறது. நாங்கள் அதை ஆதரிக்க மாட்டோம்.

வெற்றி
நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். டெக்சாஸ், ஜார்ஜியா மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். டெக்சாஸில் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருக்கிறோம். பென்சில்வேனியாவில் மிகப்பெரிய வெற்றி பெற உள்ளோம்.ஒப்பிட்டு பார்க்க முடியாத வெற்றியை நாம் பெற்று இருக்கிறோம்.

மீண்டும் ஆட்சி
மீண்டும் ஆட்சியை அமைக்கவும், கொண்டாடவும் நாங்கள் தயாராகி வருகிறோம். இது புதிய ரெக்கார்ட். என் மனைவிக்கும், குடும்பத்திற்கும் நன்றி. நாங்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம். தேர்தல் முடிவுகளில் சிக்கல் ஏற்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.

வெற்றி
நாங்கள் ஏற்கனவே வென்றுவிட்டோம். இனிமேல் புதிய வாக்குகளை லிஸ்டில் சேர்க்க கூடாது. காலை 4 மணிக்கு புதிய வாக்குகளை லிஸ்டில் சேர்த்து அதை எண்ண கூடாது. இது ஏமாற்றுவேலை. உடனே வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும். எங்களை பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே வென்றுவிட்டோம்..நாங்கள் இந்த தேர்தலில் இமாலய வெற்றியை பெற்றுவிட்டோம், என்று டிரம்ப் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications