சமந்தாவின் அந்த "வாய்" தான் எல்லாத்துக்கும் காரணம்.. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆனார்..!
தன் வாயாலேயே ஒரு பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
நியூயார்க்: தன்னுடைய வாயை வைத்து அமெரிக்க பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.. அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்தவர் சமந்தா ரெம்ஸ்டேல்... 31 வயதாகிறது.. இவர் டிக்டாக்கில் ஃபேமஸ் ஆனவர்.. விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு வருபவர்.. அதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
ஆனால், இதில் விசேஷம் என்னவென்றால், இவரது எல்லா டிக்டாக் வீடியோக்களும் சாப்பிடுவது தொடர்பானது தான்.. ஒரே நேரத்தில் பெரிய சைஸ் சாப்பாட்டு உருண்டையை வாயில் வைத்து சாப்பிடுவார்..

ரசிகர்கள்
எவ்வளவு பெரிய சாப்பாடு ஐட்டமாக இருந்தாலும் சரி, ஆப்பிள், சாண்ட்விச் இப்படி எதுவாக இருந்தாலும் ஒரே வாயில் லபக்கென விழுங்கி அதை சாப்பிட்டு விடுவார்.. இதனால் அவருக்கு நிறைய ரசிகர்கள் சேர்ந்தனர். 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரை ஃபாலோ செய்து வருகிறார்கள். இவரால் மட்டும் எப்படி பெரிய சைஸ் உணவை சாப்பிட முடிகிறது என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள்..

சமந்தா
அதற்கு காரணம், சமந்தாவின் வாய் இயற்கையிலேயே பெரிய சைஸ் ஆகும்.. சாதாரண மனிதர்களின் வாயை விட இவருக்கு கொஞ்சம் பெரியதாக இருக்கும்... இப்போது சமந்தா கின்னஸ் ரிக்கார்டிலும் இடம்பெற்று விட்டார். இவரது வாயில் உள்ள இடைவெளியின் அகலம் 6.56 செ.மீ, அதாவது 2.56 இன்ச் கொள்ளளவாக இருக்கிறது.. மொத்த வாயின் சைஸ் 10 செ .மீ.க்கும் அதிகமாக உள்ளது...

கின்னஸ்
உலகின் மிகப்பெரிய வாய் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை சமந்தா படைத்துள்ளார்... இதற்கான சர்ட்டிபிகேட்டையும் சமந்தா கின்னஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார். தன்னுடைய வாயால், சாதனை படைத்துள்ளதால், சமந்தா படுகுஷியில் காணப்படுகிறார்.

பிரபலம்
இதுகுறித்து சமந்தா சொல்லும்போது, "என் வாயால் பிரபலமாக முடியும் என்று நான் எப்போதுமே நினைத்ததில்லை.. ஆனால் அது நடந்துள்ளது.. இதை என்னால் நம்பமுடியவில்லை.. ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறது.. பெரிய உடல் பாகம் இருந்தால் மனம் தளர வேண்டாம்.. அதை தனித்துவமான திறமையாக கையாளுங்கள்... ஆனால், சில குழந்தைகளுக்கு பெரிய சைஸ் வாய் என்று கிண்டல் கேலி செய்வது வருந்தத்தக்க ஒன்று" என்றார்.. சமந்தாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications