சீனாவை சீண்ட போய்.. சொந்த நாட்டிலே உதை வாங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அப்ரூவல் ரேட்டிங் மிக மோசமாக சரிந்து உள்ளது. அமெரிக்காவில் அதிபர் ஒருவரின் ஆட்சிக்கும் அவரின் முடிவிற்கும் எவ்வளவு ஆதரவு இருக்கிறது.. மக்கள் அவரை ஆதரிக்கிறார்களா என்பதை அறிய கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்படும். இதை அப்ரூவல் ரேட்டிங் என்று அழைப்பார்கள்.

அந்த வகையில் அதிபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அப்ரூவல் ரேட்டிங் மிக மோசமாக சரிந்து உள்ளது. AtlasIntel அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில், பதிலளித்தவர்களில் 52 சதவீதம் பேர் டிரம்ப் அதிபராக செயல்படுவதை ஏற்கவில்லை என்று கூறி உள்ளனர். 46 சதவீதம் பேர் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஒரு சில வாரங்களுக்கு முன் 52 சதவிகிதம் இருந்தவரின் மதிப்பு 6 புள்ளிகள் சரிந்து 46 புள்ளிகளாக குறைந்துள்ளது. இதன் மூலம் டிரம்ப் எடுக்கும் முடிவுகளை, அவரின் திட்டங்களை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

USA Donald Trump approval rating gone down completely amid his 245 Reciprocal Tariff against China

எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள உலகளாவிய வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து உள்ளர். இதன் விளைவுகள் மிக மோசமாக இருப்பதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார்.

முக்கியமாக டிரம்ப் செய்யும் ஒவ்வொரு மூவும் அதிக பணவீக்கம் ஏற்பட காரணமாக மாறி உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கொள்கை மாற்றங்கள் ஒவ்வொன்றும் அமெரிக்காவை அதள பாதாளத்திற்கு தள்ளுவதாக அவர் எச்சரித்து உள்ளார். டிரம்ப் எடுக்கும் முடிவுகள் மோசமானதாக உள்ளன. அவர் எடுக்கும் முடிவுகளை கணிக்க முடியவில்லை. அமெரிக்காவை மோசமான நிலைக்கு தள்ளும் முடிவுகளாக அவை உள்ளன. தினம் தினம் மார்க்கெட் இதனால் பாதிக்கிறது. பல கொள்கைகளின் அடிப்படைகளை அவர் மாற்றுகிறார். அதுதான் சிக்கலே. இதனால் பணவீக்கம் அதிகரிக்கிறது.

அதாவது பணத்தின் மதிப்பு குறைகிறது. இருக்கிற பணத்தை வைத்து பொருட்களை வாங்க முடியவில்லை. டாலரின் மதிப்பு வேகமாக சரிகிறது. இதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும். எதிர்பார்க்காத சரிவை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் நாம் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்று டொனால்ட் டிரம்பிற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் எச்சரித்து உள்ளார்.

மக்கள் கோபம்

முக்கியமாக டிரம்ப் போட்ட பதிலடி வரி விதிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்கர்கள்தான். உதாரணமாக இப்போது சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. இதனால் சீனாவில் இருந்து அமெரிக்க விற்பனையாளர் ஒருவர் கப் அண்ட் சாஸர் ஒன்றை இறக்குமதி செய்தால்.. அதற்கு 245% வரி விதிக்கப்படும். ஆனால் இதை யார் கொடுப்பார்? சீனா கொடுக்காது. இந்த வரியை இறக்குமதி செய்பவர்தான் கொடுப்பார். அதாவது யார் இறக்குமதி செய்கிறார்களோ.. அமெரிக்காவை சேர்ந்த அவர்கள்தான் கூடுதல் வரி போடுவார்கள்.

இதற்காக ஏற்படும் செலவை சமாளிக்க அவர்கள் விலையை ஏற்றுவார்கள். அந்த விலையை கொடுக்க போவது அமெரிக்கர்கள்தான். அமெரிக்க மக்கள்தான. சில விவசாய பொருட்களின் விலையை ஏற்ற முடியாத பட்சத்தில்.. அதை இறக்குமதி செய்யும் விவசாயிகள்தான் சமாளிக்க வேண்டும். அவர்கள்தான் இழப்பை சந்திப்பார்கள். டிரம்ப் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சம் அடைந்து உள்ளது. அங்கே பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+