"இது தவறு.. இதயமே நொறுங்குகிறது".. ஆப்கானை விட்டு வெளியேறும் அமெரிக்க படை.. ஜார்ஜ் புஷ் கண்டனம்!
நியூயார்க்: அமெரிக்க படைகள் அவசரப்பட்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டது, இது என் இதயத்தையே நொறுக்குகிறது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடமாக தாலிபான் படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் போர் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்துவதாக அமெரிக்கா - தாலிபான் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தாலிபான் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் ஒப்புக்கொண்டது. அதன்படி ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேறும்.

தோல்வி
இந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதை பயன்படுத்தி ஆபகானிஸ்தானில் வேகமாக தாலிபான் முன்னேறி வருகிறது. தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க படைகள் போல ஆப்கானிஸ்தான் படைகள் அவ்வளவு வலுவானது கிடையாது. ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றுவிட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது.

தாலிபான்
அமெரிக்காவின் இந்த முடிவை உலக நாடுகள் பல விமர்சித்து வருகின்றன. இது குறித்து முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறி இருக்க கூடாது. அமெரிக்க படைகள் அவசரப்பட்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.

கொன்று குவிகிறார்கள்
ஆப்கானிஸ்தான் மக்களை தாலிபான்கள் கொன்று குவிக்கிறார்கள். அவர்களை காக்காமல் அமெரிக்க படைகள் வெளியேறிவிட்டது. ஆப்கானிஸ்தானின் பெண்களும், குழந்தைகளும் பல கொடுமைகளை, கஷ்டங்களை, அனுபவித்து வருகிறார்கள். அனுபவிக்க போகிறார்கள்.

தவறு
இது தவறு. கொடுமையான குணம் கொண்ட தாலிபான்கள் தங்கள் நாட்டு மக்களையே கொன்று குவிக்க போகிறார்கள். இது என் இதயத்தை நொருக்கிறது, என்று ஜார்ஸ் புஷ் ஜெர்மன் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 2001ல் அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி ட்வின் டவரில் தாக்குதல் நடத்தப்பட்டது.

பதிலடி
இந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பின்பே ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தது. ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பியது ஜார்ஜ் புஷ்தான். தற்போது அதே ஜார்ஸ் புஷ் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications