பாகிஸ்தானுக்கு அடுத்த இடி.. இந்தியாவுக்கு தான் எங்களின் ஆதரவு! அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
நியூயார்க்: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 27 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோய் உள்ளது. இதற்கு பதிலடி தர இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட நம் நாட்டுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் புல்மேட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதில் 26 பேர் இறந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்பது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் பினாமி அமைப்பாகும்.

இந்த அமைப்பு நம் நாட்டில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியாக இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகளில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக்கி உள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இன்று காலையில் மீண்டும் பாகிஸ்தான் படை வீரர்கள் இந்தியாவை சீண்டி உள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதற்கு நம் வீரர்களுக்கும் உரிய பதிலடி கொடுத்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலை பொறுத்தவரை உலக நாடுகளில் பெரும்பான்மையானவை இந்தியாவின் பக்கம் உள்ளன. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த தாக்குதலை கண்டித்து இருந்தார். தற்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வரும் நிலையில் தான் அமெரிக்கா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த விஷயத்தில் அமெரிக்கா, இந்தியாவின் பக்கம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தெடார்பாளர் டாமி புரூஸ் கூறியுள்ளார். அவர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது பஹல்கம் தாக்குதல் பற்றியும், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாமி புரூஸ், ‛‛ அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் தெளிவாக கூறிவிட்டனர்.
அமெரிக்கா இந்தியாவின் பக்கம் நிற்கிறது. பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கும், சிகிச்சையில் மீண்டும் வருவோருக்கும் பிரார்த்தனை செய்கிறோம். இந்த கொடூரமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்'' எ்னறார். இதன்மூலம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவின் பக்கம் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த வேளையில், தாக்குதலுக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டுகிறது? அதனை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டாமி புரூஸ், ‛‛ ஜம்மு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இப்போது நாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை'' என்று கூறினார்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications