மோடிக்கு நெருக்கம்! பெரிய கோடீஸ்வரர்! டைட்டன் நீர்மூழ்கியில் பலியான ஹார்டிங்.. அனுப்பிய கடைசி மெசேஜ்
நியூயார்க்: டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங் அனுப்பிய கடைசி மெசேஜ் என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது.
இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து.

கடல் ஆய்வு: இந்த டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் உண்டு. இன்னும் பலர் ஆழ் கடலுக்குள் சென்று டைட்டானிக் கப்பலில் இருந்து பொருட்களை எடுத்து வந்து மீட்கவும் முயற்சிகள் செய்வது உண்டு.
அந்த வகையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன். இதுதான் தற்போது கடலுக்கு அடியில் மூழ்கி வெடித்து உள்ளது.
டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது. இதற்கு அருகிலேயே இந்த புதிய கப்பலும் வெடித்து சிதறி உள்ளது.
யார் இவர்?: இந்த கப்பலில் ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்து உள்ளனர்
இதில் பயணம் செய்து காணாமல் போன ஹார்டிங் உலகெங்கிலும் தனது ஆய்வுப் பயணங்களுக்கு பெயர் பெற்றவர். இவருக்கும் இந்தியாவிற்கும் முக்கிய தொடர்பும் கூட உள்ளது. நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு எட்டு காட்டு சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த மோடி அரசாங்கத்துடன் இணைந்து பணிகளை செய்தது இவர்தான். அந்த நிகழ்வில் இவர் மோடியுடன் நெருக்கமானதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தனது பிறந்தநாளில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் அந்த எட்டு சிறுத்தைகளை விடுவித்தார். அதற்கு பின் இருந்த மாஸ்டார்மைன்ட் ஹார்டிங். அந்த நீர்மூழ்கி கப்பலில் இவரும் பலியாகிவிட்டார். அவரது நண்பரும் ஓய்வுபெற்ற விண்வெளி வீரருமான கர்னல் டெர்ரி விர்ட்ஸ், ஹார்டிங்கிடம் இருந்து அவர் புறப்படுவதற்கு முன்பு கடைசியாகப் பெற்ற மெசேஜ் பற்றி தகவல் வெளியிட்டு உள்ளார்.
அதில்.. ரிஸ்க் பற்றி எல்லாம் நான் இங்கே பேச போவது இல்லை. ஏனென்றால் இந்த கப்பல் பயணம் ரிஸ்க் நிறைந்ததுதான் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறி இருக்கிறார். அதுதான் அவர் கடைசியாக அனுப்பிய மெசேஜ். அதன்பின் கடலுக்குள் சென்றவர் உள்ளேயே விபத்தில் சிக்கி உள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications