Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேலின் பிளானை லீக் செய்தது யார்? உலகையே உலுக்கிய அமெரிக்கா பெண்.. யாரிந்த அரியன் தபாதாபாய்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் திட்டங்கள் தொடர்பான சீக்ரெட் சமீபத்தில் கசிந்தது. ஈரானுக்கு எதிரான பதிலடித் தாக்குதலுக்கான இஸ்ரேலின் திட்டங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக கூறப்படும் விசாரணை நடந்து வருகிறது.இந்த விசாரணையில் அரியன் தபாதாபாய் என்ற பெண் சிக்கி உள்ளார் என்று கூறப்பட்டது.

பென்டகனில் உள்ள Special Operations பிரிவின் உதவிப் பாதுகாப்புச் செயலாளரின் உதவியாளரான அரியன் தபாதாபாய் விசாரணையில் சிக்கி உள்ளதாக செய்திகள் வந்தன. இந்த செய்திகளை தற்போது பென்டகன் மறுத்துள்ளது. அதன்படி அரியன் தபாதாபாய் தற்போது வரை விசாரணை செய்யப்படவில்லை.. அவருக்கும் இந்த லீக்கிற்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை எதுவும் இப்போதைக்கு நடத்தப்படவில்லை என்று பென்டகன் விளக்கி உள்ளது.

israel palestine israel palestine war international

ஆனாலும் அரியன் தபாதாபாய் தற்போது சர்வதேச அரசியலை உலுக்கி உள்ளார். இவர்தான் சீக்ரெட் ஆவணங்களை கசியவிட்டார் என்று நேற்று காலையில் இருந்து செய்திகள் கசிந்ததால் பெரிய பரபரப்பு நிலவியது. இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஐடிகள் இவரை கடுமையாக விமர்சனங்கள் செய்தன. இவர் ஈரான் நாட்டில் இருந்து வந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் பெற்றோர் வழி முன்னோர்கள் ஈரானை சேர்ந்தவர்கள்.

2023ம் ஆண்டிலேயே இவர் ஈரான் ராணுவத்திற்கு தகவல்களை கசியவிட்டதாக கூறி விசாரணைக்கு உள்ளானார். இப்போது மீண்டும் இவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார். 2023ல் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே இவருக்கு எதிராக கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Ariane Tabatabai அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் மூத்த கொள்கை ஆலோசகர் ஆவார். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவர். பாதுகாப்புத் துறையில் சேருவதற்கு முன்பு, அவர் RAND கார்ப்பரேஷனில் ஆராய்ச்சியாளராக இருந்தார். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பயிற்றுவித்தார். தற்போது பென்டகனில் பணியாற்றி வருகிறார்.

லீக்: இஸ்ரேல் ஈரான் மீது எப்படி பதிலடி கொடுக்கும்.. எப்போது பதிலடி கொடுக்கும் என்பது தொடர்பான உளவு தகவல்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு லீக்கானது. ஈரான் மீது இஸ்ரேல் என்ன மாதிரியான பதிலடி தரப்போகிறது என்பது தொடர்பான உளவுத்துறை ஆவணங்கள் சில கசிந்து உள்ளன.

இஸ்ரேலின் பிளான் தொடர்பாக இரண்டு அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்கள்.. அமெரிக்கா முழுக்க டெலிகிராமில் கசிந்து உள்ளன. ஈரானுக்கு ஆதரவான டெலிகிராம் பக்கங்கள் இதை கசியவிட்டுள்ளன.

நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (NGA) க்கு சொந்தமான இந்த ஆவணங்கள் கசிந்து உள்ளன. அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மூலம் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சிகள் மற்றும் அவர்கள் ராணுவத்தின் தயார்நிலை பற்றிய பல்வேறு தகவல்கள் இந்த உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த படங்கள்தான் லீக்காகி உள்ளன.

அமெரிக்கா அதிர்ச்சி: அமெரிக்க அதிபர் பிடன் இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளாராம். அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் வெளிப்படையாக கசிந்தது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் "ஆழ்ந்த கவலையில்" இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. கடந்த வாரம் சமூக ஊடக தளமான டெலிகிராமில் லீக்கான ஆவணங்கள் எப்படி வெளியாகின என்பது வெள்ளை மாளிகைக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

அக்டோபர் 15 மற்றும் 16 தேதியிட்ட இரண்டு ஆவணங்களும் அமெரிக்காவின் உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இஸ்ரேலின் ராணுவப் பயிற்சிகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது ஈரான் மீதான பதிலடித் தாக்குதலுக்கான இஸ்ரேலின் பிளானிங் போல தோன்றுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் மிக பயங்கரமான தாக்குதல் நடத்த போவது இந்த ஆவணங்களால் உறுதியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+