இந்தியாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு.. இஸ்ரேலுக்கு ஆதரவு.. இரட்டை வேடம் போடும் டிரம்ப்.. கொதிக்குதே!
நியூயார்க்: ஈரானுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்கா தனது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போரை எதிர்த்த அதே அமெரிக்கா ஈரான் - இஸ்ரேல் போரை தீவிரமாக ஆதரிக்கிறது.
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு
ஈரான் மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுக்குள் அமைந்துள்ள அணு மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தாக்குதல் நடத்த போகிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெஹ்ரானில் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலின் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் கூறினர். செனட்டர் மார்கோ ரூபியோ கூறியதாவது:
"ஈரான் மீதான தாக்குதலில் நாங்கள் ஈடுபடவில்லை. இப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதே எங்கள் பிரதான நோக்கம். ஈரான் அமெரிக்காவின் தளவாடகங்களையோ அல்லது பணியாளர்களையோ குறிவைக்கக் கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்." என்று தெரிவித்தார்.
டிரம்ப் சொன்னபடிதான் தாக்குதல்
கடந்த சில நாட்களுக்கு முன்தான் இஸ்ரேலுக்கு பயங்கரமான ஐடியா ஒன்றை கொடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார்.
ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். அவர் சொன்னபடியேதான் இப்போது இஸ்ரேல் ஈரானின் அணு மையங்களை தாக்கி உள்ளது.
பாகிஸ்தான் விவகாரத்தில் நிலைப்பாடு
ஆனால் இதே அணு சக்தி விவகாரத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் - இந்தியா போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்தார். இரண்டும் அணு ஆயுத நாடுகள், போரை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகத்தை நிறுத்துவோம் என்று டிரம்ப் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் போரை எதிர்த்த அதே அமெரிக்கா ஈரான் - இஸ்ரேல் போரை தீவிரமாக ஆதரிக்கிறது.
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்கா தனது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.
இஸ்ரேல், ஈரான் மீது தயக்கமின்றி தாக்குதல் தொடுத்து வருகிறது. அமெரிக்கா அமைதி காக்கிறது. இந்தியா பாகிஸ்தானை தாக்கியபோது பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஹமாஸ் போன்ற அமைப்புகளை அமெரிக்கா தீவிரவாத அமைப்பு என்று கூறுகிறது. இதை காரணம் காட்டி இஸ்ரேலுக்கும் ஆதரவு அளிக்கிறது. ஆனால் அதே அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதத்தை பற்றி பேசுவது இல்லை. பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்களை பற்றி பேசுவது இல்லை.
முக்கியமாக தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா ஆதரவு திரட்டத் தவறிவிட்டதோ என்ற கேள்வியையும் இது எழுப்பி உள்ளது. இஸ்ரேல் போல செயல்பட இந்தியா தவறிவிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக அமெரிக்காவுடன் இருந்த நெருக்கம் இப்போது இல்லாமல் ஆகிவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications