இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு.. டிரம்ப் விடாமல் அவமானப்படுத்துவது ஏன்? இப்படி ஒரு காரணமா?
நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை மீண்டும் அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. மூன்றாவது அமெரிக்க இராணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு 112 சட்டவிரோத இந்தியக் குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமிர்தசரஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த முறையும் கை, கால்களில் விலங்கு கட்டி மிக மோசமான அவமதிக்கும் வகையில் இந்தியர்களை திருப்பி அனுப்பி உள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

சங்கிலி மூலம் கட்டப்பட்டது
இந்த விவகாரத்தில் இந்தியர்கள் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டு உள்ளனர். ராணுவ விமானத்தில் இந்தியர்களின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளது. இப்படி கை, கால்களை கட்டிய பின்பே 48 மணி நேரம் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் நாடுகடத்தப்படும் குற்றவாளிகள் என்பதால் இப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள். இந்தியர்களுக்கு இத்தனை ஆண்டு வரலாற்றில் அமெரிக்காவால் இவ்வளவு மோசமான அவமானம் நேர்ந்ததே இல்லை. அப்படி ஒரு அவமானம் இன்று நேர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏன் சங்கிலி
அமெரிக்கா போர் விமானத்தில் இவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். விதிப்படி போர் விமானம் உள்ளே இருக்கும் வரை அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
அவர்கள் சட்டப்படி அமெரிக்காவில் அத்துமீறி குடியேறியவர்கள். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எனவே அவர்களுக்கு விலங்கு போடுவது கட்டாயம்.
விதிப்படி போர் விமானம் உள்ளே இருக்கும் வரை அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்பதால் தரையிறங்கும் வரை அவர்கள் விலங்கு பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.
இதை எப்படி தடுப்பது
இதை தடுக்க ஒரே வழி இந்தியா விமானங்களை அனுப்புவது. இந்திய அரசு சார்பாக விமானங்கள் அனுப்பப்பட வேண்டும்.
குடியேறிகளை வெளியேற்ற முடிவு செய்த பின்.. இந்தியா விமானங்களை அனுப்பி அவர்களை அழைக்க வேண்டும்.
கொலம்பியா அரசு அவர்கள் குடிமகன்களை அவமானப்படாமல் இருக்க இந்த வழியையே பின்பற்றுகிறது. இந்த விவகாரத்தில் இந்தியர்கள் மிக மோசமாக அவமானப்படுத்தப்பட்டு உள்ளனர். ராணுவ விமானத்தில் இந்தியர்களின் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளது. இப்படி கை, கால்களை கட்டிய பின்பே 48 மணி நேரம் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் நாடுகடத்தப்படும் குற்றவாளிகள் என்பதால் இப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள். இந்தியர்களுக்கு இத்தனை ஆண்டு வரலாற்றில் அமெரிக்காவால் இவ்வளவு மோசமான அவமானம் நேர்ந்ததே இல்லை. அப்படி ஒரு அவமானம் இன்று நேர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்
டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
சரியாக மோடி அமெரிக்காவில் இருந்த அதே நேரத்தில் டிரம்ப் இந்தியர்களை நாடு கடத்தி உள்ளார் என்பதுதான் இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,407 இந்தியர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications