எங்கேயும் நிற்காத "ஏர்இந்தியா ஒன்".. பல வருட பாரம்பரியத்தை உடைத்த மோடியின் அமெரிக்க டிரிப்.. பின்னணி
நியூயார்க்: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. அவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட விதமே இந்த முறை வித்தியாசமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம் அவர் வாஷிங்க்டன் சென்றடைந்தார்.
Recommended Video
பிரதமர் மோடி 5 நாள் பயணமாக கடந்த புதன் கிழமை அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்றபின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் அமெரிக்க பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பே இரண்டு நாட்டு தலைவர்களும் குவாட் மீட்டிங் உட்பட மூன்று மீட்டிங்குகளில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டாலும் முதல் முறை இவர்கள் நேரடியாக சந்திப்பு நடத்த உள்ளனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்ற பல உயர் அதிகாரிகள் பிரதமருடன் அமெரிக்கா சென்றுள்ளனர். இதுவரை நடந்த மீட்டிங்குகளில் பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தார். இரண்டு நாட்டு உறவு குறித்தும் ஆசிய பிரச்சனைகள் குறித்தும் இருவரும் உரையாடினார்கள்.

கமலா காரில்
ஏற்கனவே இரண்டு தலைவர்களும் தொலைபேசி வழியாக பேசி இருந்தாலும், இருவரும் நேரில் சந்தித்து நேற்று உரையாடினார்கள். இந்தியாவிற்கு வரும்படி கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த நிலையில் இன்னொரு பக்கம் பிரதமர் மோடி அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களான குவால்காம், அடோப், பர்ஸ்ட் சோலார், ஜெனரல் அட்டாமிக்ஸ், பிளாக் ஸ்டோன் போன்ற நிறுவனங்களின் சிஇஓக்களை நேரில் சந்தித்து உரையாடினார்.

விமானம்
இந்த நிலையில் பிரதமர் மோடி அமெரிக்காவின் இந்த பயணத்திற்காக இந்த முறை முக்கியமான சில சம்பிரதாயங்களை உடைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் வான்வெளி பாதுகாப்பு இல்லை என்பதால் அதை பயன்படுத்தாமல் பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானம் சென்றது. பாகிஸ்தான் இந்த விமானம் பறக்க அனுமதி அளித்த காரணத்தால் இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தினார்.

நிற்கவில்லை
பொதுவாக இந்திய பிரதமர்கள் அமெரிக்க செல்லும் போது இடையில் ஜெர்மனியில் உள்ள பிராங்போர் விமான நிலையம் சென்றுவிட்டு அங்கு எரிபொருள் நிரப்பிவிட்டு அங்கிருந்து பயணம் மேற்கொள்ளும். நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் இடையில் இந்த பிரேக் எடுப்பதுதான் இதுவரை பாரம்பரியம். ஆனால் இந்த முறை பிரதமர் மோடி சென்ற விமானம் எந்த பிரேக்கும் எடுக்காமல் வாஷிங்க்டன் வரை சென்றது.

சிறப்பு
இதற்கு காரணம் ஏர்இந்தியா ஒன் விமானம் ஆகும். இது பிரதமருக்காக வடிவமைக்கப்பட்ட புதிய Boeing 777-337 வகை விமானம் ஆகும். நீண்ட தூரங்களுக்கு எந்த எரிபொருளும் நிரப்பாமல் இதன் மூலம் செல்ல முடியும். இந்த விமானம் 4,500 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இந்த விமானம் காரணமாகவே பிரதமர் மோடி எந்த பிரேக்கும் எடுக்காமல் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடிந்தது.












Click it and Unblock the Notifications