வெரி ராங் ப்ரோ! உங்க நாட்டையே அல்லோகலப்படுத்த போகிறோம்! டிரம்ப்பிற்கு யார் சவால் விட்டதுன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பின் மீது அமெரிக்கா ஏவுகணை மாறும் விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 57 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று ஹவுதி எச்சரித்து உள்ளது. அமெரிக்காவின் போர் கப்பல்கள், போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.

அமெரிக்காவையே அல்லோகலப்படுத்த போகிறோம். கவனமாக இருங்கள் என்று ஹவுதி எச்சரித்து உள்ளது. சமீபத்தில்தான் ஹவுதி அமைப்பை சர்வதேச தீவிரவாத குழுவாக அறிவித்தது அமெரிக்கா. ஹவுதி - அமெரிக்கா இடையே செங்கடலில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

3 ஆண்டுக்குமுன் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அந்த அமைப்பு நீக்கப்பட்டது. மீண்டும் தற்போது அமெரிக்க அதிபர் பிடன் முன்னெடுப்பில் ஹவுதி தீவிரவாத லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது அதிபர் டிரம்ப் அவர்கள் மீது ஏவுகணை, விமானப்படை தாக்குதலை நடத்தி வருகிறார்.

Yemen Houthi announced of taking revenge against USA Donald Trump actions

ஹவுதி அமைப்பு யார்?

ஏமனில் போராடி வரும் ஹவுதி போராளிகள் மீது அமெரிக்கா, யுகே ஆகியவை கூட்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. கடுமையான தாக்குதல்களை இரண்டு தரப்பும் சேர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.ஏமன் விடுதலை தொடங்கி இஸ்ரேல் போருக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது.

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் நாட்டின் ஒரு பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஹவுதிகள் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக தாக்குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்க செங்கடலில் மாறி மாறி நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில்தான்தான் ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கப்பல் ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்கப்பட்டது. ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்க கப்பலை தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது

ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் இருந்த அமெரிக்க கப்பலை நோக்கி வீசப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தோராயமாக 2-3 ஏவுகணைகள் கப்பலை தாக்கி சேதப்படுத்தி உள்ளன.. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதல் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்கா

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஈரான் நேரடியாக தலையிட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி போராளி குழுக்கள் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவு செயல்பட்டு வருகிறது. ஈரான், ஏமனில் இயங்கி வரும் இந்த ஹவுதி காஸாவில் இயங்கும் ஹமாஸ் படைகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

தொடர் தாக்குதல்; கடந்த நாட்களாக ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டது. இவை அமெரிக்காவின் இடைமறித்து ஏவுகணைகள் மூலம் மறித்து அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்காவின் கப்பல் ஒன்று தாக்கப்பட்டு உள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற கப்பலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கப்பலில் உள்ளவர்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரான் ஆதரவு ஹவுதிகள் நவம்பர் முதல் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பின் மீது அமெரிக்கா ஏவுகணை மாறும் விமானப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 24 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+