குர்ஆன் மீது உறுதிமொழி.. ரயில் சுரங்கத்தில் நின்று.. நியூயார்க் மேயராக பதவியேற்றார் மம்தானி
நியூயார்க்: நியூயார் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி எனும் இஸ்லாமியர் வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை இடதுசாரியாக அறிவித்துக்கொண்டிருக்கும் இவர். டிரம்பின் கொள்கைகளுக்கு நேரெதிரானவராக இருக்கிறார். இந்நிலையில் இன்று ரயில் சுரங்கத்தில் நின்று மேயராக பதவியேற்றுக்கொண்டிருக்கிறார்.
ஜனநாயகக் கட்சியின் மம்தாணி, நியூயார்க் நகர மேயராக இன்று பதவியேற்றுள்ளார். மான்ஹாட்டனில் பயன்பாட்டில் இல்லா ரயில்வே சுரங்கப்பாதையில் மேயராக பதவியேற்றுக்கொண்டார். குர்ஆன் மீது உறுதிமொழி ஏற்று அவர் பதவியேற்றிருக்கிறார். நியூயார்க் நகர வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் மேயராக பதவியேற்பதும், குர்ஆன் மீது உறுதிமொழியேற்று ஒருவர் பதவியேற்பதும் இதுவே முதல் முறையாகும்.

நியூயார்க்கின் முதல் தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயர் என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். தனது 34 வயதில் இந்த பதவியை பொறுப்பேற்று இருக்கிறார். இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு உகாண்டாவில் பிறந்தார். இவரது தாய் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் மீரா நாயர் ஆவார். தந்தை ஒரு அறிஞர். இவர் தனது 7வது வயதில் நியூயாருக்கு வந்தார். கடந்த 2018 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். 2020இல் குவின்ஸ் பகுதியில் இருந்து மாநில சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நியூயார்க் மேயர் தேர்தலில் இவர் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியான பின்னர், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இவரது வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றன.
இலவச குழந்தைகள் பராமரிப்பு மற்றும் இலவச பேருந்து வசதி கொடுக்கப்படும் என்றும், சுமார் 10 லட்சம் வீடுகளுக்கு வாடகை உயர்வு இருக்காது என்றும் அறிவித்திருந்தார். அதேபோல அரசு நடத்தும் மளிகை கடைகளை திறப்பேன் என்றும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.
என்னதான் இவர் தேர்தலில் வெற்றி பெற்று மேயராக தேர்வாகி இருந்தாலும், அதிபர் டிரம்ப் இவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார். நியூயார்க் நகரத்திற்கான நிதி உதவியை குறைப்பேன் என்றும் டிரம்ப் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.
-
டிரம்பிற்கு மரண அடி கொடுத்த நீதிமன்றம்.. H-1B விசா கட்டண உயர்வு ரத்து.. இந்தியர்களுக்கு மிக வெற்றி -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications