கைகோர்த்த ஓபிஎஸ், தினகரன்.. குறுக்கே கட்டையைப் போடும் எடப்பாடி டீம்.. அப்போ பிளான் என்னாகும்?
நீலகிரி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினர் மனு கொடுத்துள்ளனர்.
கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த காவலர் கொலை, மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தொடர்ந்து கோடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியிலேயே விசாரணை தொடங்கியது. ஆனால், விசாரணை முழுவீச்சில் நடைபெறவில்லை. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. தற்போது, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மர்ம நிகழ்வுகள் குறித்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
திமுக அரசு உரிய நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஆதரவு அளித்து, ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அமமுகவினரும் கலந்து கொள்வார்கள் என அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் டி.டி.வி.தினகரன் இருவரும் கை கோர்த்துள்ள நிலையில், இரு தரப்பும் ஒன்றாகப் பங்கேற்கும் முதல் போராட்டம் என்பதால் இதனை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடத்த வேண்டும் என இரு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இரு தரப்பு நிர்வாகிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுகவின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனக் கோரி அதிமுகவினர் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர். கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பு நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக கொடி மற்றும் கட்சி சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என நீலகிரி மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.
அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு பலம் பெருகி வரும் சூழலில், அவரது தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இருவரும் கை கோர்த்துள்ள சூழலில் அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்தக்கூடாது என ஈபிஸ் தரப்பு முறையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், அதிமுக கட்சிக்கொடியைப் பயன்படுத்தி திருச்சியில் மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்











Click it and Unblock the Notifications