"அட்டாக் பன்ற புலி" இன்னும் சிக்கவில்லை.. நாலாபக்கமும் புலியை பிடிக்க புதிய டெக்னிக்!
நீலகிரி: 13 நாட்களாக போக்கு காட்டி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க 4 இடங்களிலும் மாட்டை கட்டிவைத்துவிட்டு வனத்துறையினர் பரண் மேல் காத்துக் கிடக்கிறார்கள்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் 4 பேரை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளார்கள்.
வனத்தில் உள்ள மரங்களில் பரண் அமைத்து புலியை தேடிவருகிறார்கள். இவர்களுடன் இணைந்து சிப்பிப்பாறை நாயும் ஆட்கொல்லி புலியை தேடி வருகிறது. இன்று 13 ஆவது நாளாக புலியை தேடி வரும் நிலையில் அதுவோ இவர்களிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

தானியங்கி கேமராக்கள்
குறிப்பாக 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்ட அதிரடி படை யினர், 8 தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உட்பட பல்வேறு குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்காரா வனப்பகுதி
அந்த புலியானது சிங்காரா வனப்பகுதியில் தென்பட்ட நிலையில் நேற்று முதல் 4 இடங்களில் பரண் அமைத்து அதில் கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசியுடன் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அடுத்தகட்ட முயற்சியாக புதர்களில் பதுங்கி இருக்கும் புலியை கண்டறிவதற்கான அதிநவீன 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ட்ரோன் கேமராவை கொண்டு வனப்பகுதிக்குள் சென்று புலியை கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

4 மாடுகள் கட்டி வைத்து
இந்த நிலையில் 13 ஆவது நாளான இன்று சிங்காரா வனப்பகுதிகளில் 4 இடங்களில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு அதன் மேல் வனத்துறையினர், கால்நடைத் துறையினர் பரண் அமைத்து கண்காணிக்கிறார்கள். இந்த கால்நடையை வேட்டையாட புலி வந்தால் உடனே மயக்க ஊசி செலுத்த தயார் நிலையில் இருக்கிறார்கள். எப்போதுதான் புலி சிக்குமோ தெரியவில்லை.

டி23 என்றால் ஏன்
இந்த புலிக்கு டி23 என ஏன் பெயர் வந்தது என்றால் தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும் போது புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உளள புலிகளில் ஒன்றுதான் 13 வயதுடைய டி23 புலி.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications