ஒரு வாரமாக பற்றி எரியும் நீலகிரி.. 5,000 ஏக்கர் வனப்பகுதி சேதம்.. ஹெலிகாப்டர் முயற்சியும் தோல்வி
நீலகிரி: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொதித்து கொண்டிருக்கிறது. வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறார்கள். மலைப்பிரதேசங்களிலும் இயல்பை விட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. நீலகிரி வனப்பகுதியில் கடந்த வாரம் காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. சுமார் 5,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, காட்டு மாடு, கரடி, சிறுத்தை, மான், வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தமிழ்நாடு - கேரளா - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் யானை வழித்தடங்கள் அங்குள்ளன.

நீலகிரி காட்டு தீ
பல வகையான புல்வெளிகள், அரிய வகை தாவரங்களும் நீலகிரி வனப்பகுதியில் உள்ளன. தமிழகம் முழுவதுமே கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நீலகிரியிலும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பைக்காரா, கிளன்மார்கன் வனப்பகுதிகளில் கடந்த வாரம் அதி தீவிர காட்டு தீ உருவானது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வனத்துறையினர் அந்த காட்டுத்தீயை அணைப்பதற்கு தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனிடையே கடந்த 24 ஆம் தேதி அவலாஞ்சி அருகே பார்சன்ஸ்வேலி வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு வேமகாக பரவியது. கடுமையான வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டு தீ சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பரவியது.
தொடர்ந்து பரவும் தீ
இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் நிலவி வருகிறது. காட்டு தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கோவை, திருப்பூர் ஈரோடு, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பணியாற்றும் வனத்துறை ஊழியர்கள் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வனத்துறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தீயணைப்புத் துறையில் 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு ஊழியர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் என்று பெரிய படையே இணைந்து அங்கு காட்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஹெலிகாப்டர் மூலம் போராட்டம்
போர்கால நடவடிக்கையாக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் நீலகிரி வரவழைக்கப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சிகள் செய்யப்பட்டன. அந்த முயற்சியும் பெரியளவுக்கு கைக்கொடுக்கவில்லை. நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு தீ கட்டுக்குள் வராமல் பற்றி எரிந்து பரவி வருகிறது.
காட்டு தீயை அணைப்பதற்கு வனத்துறையினர் இரவும் பகல் பாராமல் போராடி கொண்டிருக்கிறார்கள். இந்த காட்டு தீயால் நீலகிரியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி சேதமாகியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நேற்று ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி கைவிடப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications