ஜில் ஜில் சாரல்.. கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளக் காடான ஊட்டி.. வெப்பச் சலனத்தால் நீடிக்குமா மழை?
நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெப்பசலனம் காரணமாக 3வது நாளாக கொட்டித் தீர்த்த கனமழையால் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாதிப்படைந்த நிலையில், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளமாக காட்சியளித்தது.
Recommended Video
தமிழகத்தில் கோடைக்காலம் வழக்கமாக மே மாதத்தில் தான் உச்சத்தில் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாத இறுதியிலிருந்து வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது.
வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தற்போது மார்ச் மாதத்தில் இருந்தே சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கடும் வெயில்
வார இறுதி நாட்கள் மற்றும் கோடை விடுமுறையின்போது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைவாசஸ்தலங்கள் சென்று அங்கு மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க தங்கி வருகின்றனர். வழக்கம் போலவே தற்போதும் மார்ச் மாதத்தில் இருந்தே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

ஊட்டியில் வெப்பசலனம்
அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
கடும் வெயில் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தைவிட குறைந்த அளவில் காணப்பட்ட நிலையில் விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

கன மழை
இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு லேசாக சாரல் மழை பெய்யத் தொடங்கியது தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் ஊட்டியில் முக்கிய சுற்றுலா பகுதிகளான படகு இல்ல சாலை, நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது.

3வது நாளாக மழை
இதனால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்த நிலையில் விவசாயிகளும் பொதுமக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் வெப்பச்சலனம் குறைந்து குளிர்ந்த காற்று மாலை நேரங்களில் வீசிய நிலையில் ஈரப்பதம் அதிகரித்து விவசாயத்திற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் ஊட்டியில் கனமழை பெய்து வருகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications