ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.. ஊட்டிக்கு இ-பாஸ் பெறுவது எப்படி? ஈஸி
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்ல வரும் 7 ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தான் ஊட்டி செல்ல எப்படி இ-பாஸ் பெற வேண்டும் என்பது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா விளக்கி உள்ளார்.
கோடையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த செல்கின்றனர். இந்நிலையில் தான் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அதன்படி சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தான் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஊட்டி வருவோர் இ-பாஸ் பெறுவது எப்படி? என்பது பற்றி விளக்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இ-பாஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவாக உள்ளது. மேலும் இ-பாஸ்க்கு என்று வழிக்காட்டுதல்களை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது.
அதன்படி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் என்பது டிஎன்இஜியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊட்டிக்கு சுற்றுலா, வணிகம், தொழில்முறை சார்ந்து வாகனங்களில் வருபவர்கள் இந்த இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய் வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்யும்போது ஆர்டர் ஜெனரேட் ஆகும். அதில் ஒரு க்யூஆர் கோட் இருக்கும். அந்த க்யூஆர் கோட்டை சோதனையில் இருக்கும் அதிகாரிகள் பரிசோதித்து வேலிடா? இல்லையா? என்பதை பார்த்து வாகனங்களை அனுமதிப்பார்கள்.
இந்த இ-பாஸ் நடைமுறை என்பது ரொம்ப ஈஸியானது. யாராவது வெளிநாடுகளில் இருந்து வந்தால் அவர்கள் இ-மெயில் விபரத்தையும், நம் நாட்டில் உள்ளவர்கள் செல்போன் எண் விபரத்தையும் பயன்படுத்தி தங்களின் சுயவிபரங்களை பதிவிட்டால் போதும். எங்கிருந்து வருகிறோம் என்பதையும், எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை ஊட்டியில் இருப்பார்கள், எந்த இடத்தில் தங்க உள்ளனர் என்பதை குறிப்பிட வேண்டும்.மேலும் பயணிக்கும் வாகனம் காரா, பஸ்ஸா, வேனா என்பதையும், வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்ய உள்ளனர்கள் என்பதையும் குறிப்பிட்டால் போதும் இ-பாஸ் ஜெனரேட் ஆகிவிடும்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். இந்த இ-பாஸ் நடைமுறையில் எத்தனை பேர் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வாகனங்களுக்கான இ-பாஸ் பதிவு நடைமுறை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும். பேருந்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை'' என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications