கொடநாடு வழக்கில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. கிரீன்வேஸ் சாலையில் பதிவான அந்த 4 எண்கள்! சிபிசிஐடி தகவல்
ஊட்டி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சென்னை கிரீன்வேஸ் சாலை செல்போன் டவர் வழியாக பேசப்பட்ட 4 செல்போன் எண்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக நீலகிரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி புதிய தகவலை தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இதை சசிகலா பராமரித்து வந்தார். சென்னையில் கோடை காலங்களில் நீலகிரியில் உள்ள கொடநாடுக்கு சென்று ஜெயலலிதா ஓய்வெடுப்பது வழக்கம்.

எனவே இந்த கொடநாட்டை ஒரு குட்டி தலைமைச் செயலகம் என அழைப்பார்கள். இந்த நிலையில் ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜும் அவருடைய கூட்டாளிகளும் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் சாலை விபத்தில் கனகராஜ் இறந்துவிட்டார். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட கேரளத்தை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டத்தில் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. முன்பு நடந்த விசாரணையின் போது சிபிசிஐடி போலீஸார் 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் இன்ற ஊட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த 13 மாதங்களாக கொடநாடு கொள்ளை கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு இன்று ஊட்டி நீதிமன்றத்தில் வந்த போது நீதிபதி அப்துல் காதர் செல்போன் டவரில் இருந்து எஸ்டேட்டுக்கு வந்த போன் எண்களை விசாரித்து வருகிறோம் என்கிறீர்கள். அந்த எண்களை யாருடையது, அங்கு எங்கே அனுப்பப்பட்டுள்ளது., அதன் ஆய்வு முடிவுகள் எப்போது கிடைக்கும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அப்போது சிபிசிஐடி கூறுகையில் இந்த செல்போன் எண் தொடர்பான விவரங்களை குஜராத்தில் உள்ள ஆய்கத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். இந்த செல்போன் எண்கள் பற்றிய தகவல்களை ஜூலை மாதம் குஜராத் ஆய்வு மையத்திற்கு அனுப்பினோம். இதன் முடிவுகள் வந்ததும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கிறோம் என்றும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு கிரீன்வேஸ் சாலைக்குள்பட்ட செல்போன் டவரில் இருந்து 4 எண்கள் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்ததாகவும் அதுகுறித்து ஆய்வுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர். இந்த ஆய்வு மேற்கொள்ள ஏன் இத்தனை தாமதமானது. இந்த ஆய்வை விரைவாக முடிக்கக் கோரி குஜராத் ஆய்வகத்திற்கு இந்த நீதிமன்றம் ஏன் கடிதம் எழுதக் கூடாது . அதை வலியுறுத்தி நான் கடிதம் எழுதலாமா என நீதிபதி கேட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசியல்வாதிகள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications