வீடியோ காலில் பேசுகிறோம்.. சரண்டராக ரெடியான 4 பேர் டீம்.. கோடநாடு வழக்கில் திருப்பம்.. பின்னணி
நீலகிரி: கோடநாடு வழக்கில் முக்கியமான 4 சாட்சியங்கள் சரண்டர் ஆக தயாராக இருப்பதாக போலீசாரிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
கோடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வழக்கை துரிதமாக விசாரித்து வருகிறார்கள். கோடநாடு பாதுகாவலர் மரணம், கனகராஜ் மரணம், சயான் குடும்பத்தினர், கோடநாடு பொறியாளர் மரணம் உள்ளிட்ட பல மரணங்களை இதில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேரளாவில் ஒரு தனிப்படை, தமிழ்நாட்டில் 3 தனிப்படை, நேபாளத்திற்கு ஒரு தனிப்படை விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வழக்கில் விரைவில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரண்டர்
இந்த வழக்கில் முக்கியமான சாட்சியங்களாக பார்க்கப்பட்ட 4 பேர் தற்போது சரண்டர் ஆக ரெடியாகி உள்ளனர். தீபு, சதோஷ் சாமி, ஜித்தன் ஜாய், சதீசன் ஆகியோர் தற்போது சரண்டர் ஆக ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்கள் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை நடந்த சமயத்தில் கேரளாவிற்கு எல்லை பகுதி வழியாக தப்பி ஓடினார்கள். இவர்களுக்கு கேரளா தப்பி ஓட தமிழ்நாட்டில் சிலர் உதவியதாக கூறப்பட்டது.

விசாரணை
இந்த நிலையில் கடந்த விசாரணையின் போது இவர்களிடம் சரியாக வாக்குமூலம் வாங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. போலீசார் அப்போது இவர்களிடம் வாக்குமூலம் வாங்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் தற்போது இவர்கள் 4 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுக்க தயாராகி உள்ளனர். கேரளாவில் சமீபத்தில் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். கேரளா சென்ற தனிப்படை போலீசார் கனகராஜ் மரணம் குறித்தும், சயான் குடும்பத்தினர் மரணம் குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

வீடியோ கால்
இந்த நிலையில் தற்போது வீடியோ கால் மூலம் விசாரணையில் வாக்குமூலத்தை பதிவு செய்ய இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் வெளியே வந்தால் எங்களுக்கு ஆபத்து. போலீஸ் அழைக்கும் போது நாங்கள் சரண் அடைய தயார். எங்களுக்கு உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக போலீசார் வீடியோ காலில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று இவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர்கள்
இவர்கள் நால்வரின் வழக்கறிஞர்கள் மூலம் தபால் வழியாக போலீசாரிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் வீடியோ கால் முறையில் இவர்களிடம் விசாரிக்கப்பட உள்ளது. இவர்கள் நான்கு பேரின் வாக்குமூலம் கடந்த முறை முழுமையாக பெறப்படவில்லை. இதனால் இந்த முறை இவர்களின் வாக்குமூலம் வழக்கின் திசையை மொத்தமாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. அதை பொறுத்தே அடுத்தடுத்து புதிய சாட்சியங்கள் வழக்கில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications