வீட்டில் பூஜை அறை இருக்கு.. என் மனைவியே தீவிர ராம பக்தை தான்.. ஆ ராசா விளக்கம்
நீலகிரி: எனக்கு கடவுள் மீது கோபம் கிடையாது. என் மனைவி தீவிர ராம பக்தை. வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருப்பார். என் வீட்டில் இன்னும் பூஜை அறை உள்ளது. இங்குள்ள எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடட்டும் என திமுக எம்பியும், நீலகிரி தொகுதி வேட்பாளருமான ஆ ராசா பேசியுள்ளார். இதனால் தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் வாக்குக்காக பல்டியடிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆ ராசா. திமுகவின் துணை பொதுச்செயலாளராக உள்ள ஆ ராசா நீலகிரி லோக்சபா தொகுதி எம்பியாக செயல்பட்டு வருகிறார். தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நீலகிரி (தனி) தொகுதியில் ஆ ராசா திமுக வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

சிட்டிங் எம்பியான ஆ ராசா எதிர்த்து அதிமுகவில் லோகேஷ் தமிழ் செல்வன், பாஜகவின் மத்திய இணையமைச்சர் எல் முருகன், நாம் தமிழர் கட்சியில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். நான்கு முனை போட்டியால் நீலகிரி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
குறிப்பாக ஆ ராசாவை எதிர்த்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியிடுவதால் நீலகிரி லோக்சபா தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஆ ராசாவை எடுத்து கொண்டால் அவர் தீவிர கடவுள் மறுப்பாளர். குறிப்பாக இந்து மதம் குறித்து அவர் கூறும் கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பும். சமீபத்தில் கூட கடவுள் ராமரை நாங்கள் ஏற்க மாட்டோம் என அவர் பேசிய கருத்து விவாதத்தை கிளப்பியது. இதனால் அடிக்கடி இந்து மதம் குறித்த சர்ச்சையில் ஆ ராசா சிக்கி வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் கடவுள் மீது தனக்கு கோபமில்லை. நம்பிக்கையிருந்தால் கடவுளை வணங்கலாம் என்பது மட்டுமின்றி, மறைந்த அவரது மனைவி கூட தீவிர ராம பக்தை. வாரம் 3 நாட்கள் விரதம் இருந்ததாக கூறியுள்ளார். அதாவது நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட குன்னூர் பகுதியில் ஆ ராசா நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். பாஜக ஆட்சியில் அனைத்து இடங்களிலும் ஊழல் உள்ளது. பங்கு சந்தை உள்பட அனைத்து இடங்களிலும் ஊழல் செய்துவிட்டு நான் தான் விஸ்வகுரு. உலகத்தின் தலைவர் என சொல்கிறார்கள் என காட்டமாக சாடினார்.
இந்த வேளையில் ஆ ராசா, கடவுள் பக்தி தொடர்பாகவும் பேசினார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛என் மனைவி சனிக்கிழமை ராமரை கும்பிட்டு விரதம் இருந்தார். வியாழக்கிழமை எனக்காகவும், திங்கட்கிழமை சிவனுக்காக விரதம் இருந்தார். வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருந்தார். என் வீட்டில் பூஜை அறை இன்றும் உள்ளது. அந்த அம்மாவிற்கு நம்பிக்கை இருந்தால் அவர் பூஜை செய்தார். எனக்கு நம்பிக்கையில்லை. நான் பூஜை அறைக்கு சென்றது இல்லை.
இங்குள்ள எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இருப்போர் கடவுளை கும்பிடப்பட்டும். எதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பக்தி என்பது தனிமனித தேவைக்கானது. என் ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு கடவுள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். கள்ளம் இல்லாத உள்ளம் தான் கடவுள் என்று சொல். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். கடவுள் மீது எனக்கு கோபம் இல்லை. கும்பிட்டு விட்டுப்போ'' என பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தேர்தல் நெருங்கிவிட்டதால் ஆ ராசா அந்தர் பல்டி அடித்துள்ளார். ராமர் மற்றும் கடவுள் வழிபாட்டுக்கு எதிராக பேசிய ஆ ராசாவின் மாற்றத்துக்கு தேர்தல் தான் காரணம் என விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்?












Click it and Unblock the Notifications