நீலகிரி மலைப்பகுதியில் தலை குப்புற கவிழ்ந்த ஓபிஎஸ் பிரச்சார வாகனம்.. பெரும் பரபரப்பு
Recommended Video

ஊட்டி: கூடலூர் அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சார வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்யப்போகும் தொகுதியில் அவர்களுக்காக சிறப்பு வாகனங்களை முன்கூட்டியே கொண்டு செல்வது வழக்கம்.
இன்று நீலகிரி மாவட்டத்தில், அந்த லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்றிருந்தார்.

ஊட்டி சென்ற வண்டி
இதையொட்டி, சென்னையிலிருந்து, ஊட்டிக்கு நேற்று இரவு 9 மணிக்கு சிறப்பு பிரச்சார வாகனம் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகளை முடித்துக் கொண்டு, இன்று காலை கூடலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊட்டியிலிருந்து, கூடலூர் செல்லும் பாதை மிகவும் சரிவான பகுதியாகும்.

இருவர்
வாகனத்தை ஓட்டுநர் இயக்கிய நிலையில், உடன் ஒரு உதவியாளர் இருந்துள்ளார். இந்த பிரச்சார வாகனம், ஊட்டி- கூடலூர் நடுவே, நடுவட்டம் என்ற பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது, தலைகுப்புற கவிழ்ந்தது.
உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!

பள்ளத்தில் விழவில்லை
இந்த விபத்தில், டிரைவர் மற்றும் உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நல்லவேளையாக, சாலையிலேயே வாகனம் கவிழ்ந்தது. மலைப்பாதை என்பதால் சற்று தள்ளி வாகனம் கவிழ்ந்திருந்தால், பள்ளத்தில் வாகனம் உருண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

அப்செட்டில் ஓபிஎஸ்
முன்னதாக கூடலூரில் ஓபிஎஸ் வருகை தந்து பிரச்சார வாகனத்திற்காக காத்திருந்தார். அவருக்கு இந்த தகவல் சொல்லப்பட்டது. இதனால் அவர் அப்செட் ஆனார். இதன்பிறகு, வேறு வாகனம் கொண்டு செல்லப்பட்டு, ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார்.

ஜெயலலிதாவின் 2வது வீடு
இந்த விபத்துக்கு என்ன காரணம் என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்டிமென்ட்டாக இந்த விபத்தை, அப்செட்டாக பார்க்கிறார்கள் அதிமுகவினர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் அவரது படம் பதித்த வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது சரியாக தெரியவில்லை என அதிமுகவினர் கையை பிசைகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications