மாநகராட்சியாக தரம் உயருகிறது ஊட்டி.. தமிழ்நாட்டில் விரிவாக்கப்பட்ட பல நகராட்சிகள்! இதை நோட் பண்ணுங்க
நீலகிரி: நீலகிரியில் அமைந்து உள்ள ஊட்டி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி பல நகராட்சியை விரிவாக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.
நேற்று தமிழ்நாடு முழுக்க பல மாநகராட்சிகள், நகராட்சிகள் நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டன. அரியலூர் நகராட்சி, செங்கல்பட்டு நகராட்சி, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் விருதுநகர் நகராட்சிகள், பொன்னேரி, ஆரணி, திருவதிபுரம் & வந்தவாசி நகராட்சிகள் என்று பல மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அதேபோல் திருநெல்வேலி முதல் திருப்பூர் மாநகராட்சி, சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்டு உள்ளன. திருச்சி, மதுரை, கரூர், ஓசூர், மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்டு உள்ளன.

பரிந்துரை: இது போக நீலகிரியில் அமைந்து உள்ள ஊட்டி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அவிநாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு, போளூர், செங்கம், சேத்துப்பட்டு, அன்னூர், சூலூர், வேலூர், மோகனூர், வள்ளியூர், மணச்சநல்லூர், ஹாரூர், திருவட்டாறு, உத்த குலசேகரம், இத்த குலசேகரம் ஆகிய ஊராட்சிகள் முன்மொழியப்பட்டுள்ளன. . பல்வேறு கிராம பஞ்சாயத்துகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
இதில் விரைவில் முடிவு எடுக்கப்படும். கிராம பஞ்சாயத்துகள் டிசம்பரில் காலாவதியானதும், இணைப்பு முன்மொழிவுகள் நிறைவேற்றப்படும். டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த விரிவாக்கத்திற்கான பணிகள் மொத்தமாக முடிவு அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக உதகமண்டலம் பேரூராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரும் எழுச்சியால், இந்த விரிவாக்கம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடிமக்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு சந்தித்துள்ளது. . ஊட்டிக்கு சூழலியல் பிரச்சனைகளை இது ஏற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி கவுன்சில தீர்மானத்தில் ஊட்டி தற்போது 36 வார்டுகளை உள்ளடக்கியதாக மொத்தம் 30.67 சதுர கி.மீ கொண்டதாக உள்ளது. 2011 பதிவுகளின்படி, 88,430 மக்கள் வசிக்கின்றனர். இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 1.23 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
இது போக சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் விரிவாக்கப்பட்டு உள்ளன. 37 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் வகையில், அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் போன்ற பல பகுதிகள் இதனால் பயன் அடைய போகின்றன. டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025க்குள் இந்த விரிவாக்கத்திற்கான பணிகள் மொத்தமாக முடிவு அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சி 84.7 சதுர கிமீ அளவில் இருந்து 172.34 சதுர கிமீ வரை வளரும், இது கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் நான்கில் ஒரு பங்கு அளவு. இணைப்பின் மூலம் அதன் மக்கள் தொகை 7,23,017ல் இருந்து 10,08,473 ஆக உயரும்.












Click it and Unblock the Notifications