அதிமுக அரசின் சாதனைகளை சொன்னாலே போதும்.. மக்கள் வாக்களிப்பார்கள்... செல்லூர் ராஜூ பேச்சு

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசின் சாதனைகளை சொன்னாலே போதும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார். மக்களின் நலன் கருதி அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

The AIADMK Governments achievements are enough to make vote Says Minister SellurRaju

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளதாகவும், ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த இரண்டாயிரம் ரூபாயை, அதிமுக அரசு நிச்சயம் வழங்கும் என்றும் கூறினார்.

இத்திட்டத்தை செயல்படுத்தவிடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்தியதாக கூறிய அவர், பணம் வழங்குவதில் தவறில்லை என்ற நீதிமன்ற உத்தரவை, முதலமைச்சரின் முன்னெடுப்பால் போராடி பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தலையொட்டி நிறுத்தப்பட்டுள்ள இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் இத்திட்டமானது, தேர்தலுக்கு பிறகு தொடங்கும் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் நேரத்தில் போட்டி இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+