ஊட்டியில் இளைஞரை கொன்று தின்ற புலி.. விறகு சேகரித்த போது நிகழ்ந்த விபரீதம்.. என்ன நடந்தது?
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே கொள்ளக்கோடு மந்து வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை தாக்கி கொன்ற புலி, அவரின் பாதி உடலை தின்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், புலி இருப்பதை அறியாமல் சென்ற போது, இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கொள்ளக்கோடு மந்து வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை கொள்ளக்கோடு மந்து வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் சென்றுள்ளார். அவர் இரவு நேரத்தை எட்டிய போதும், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அச்சமடைந்த உறவினர்கள், உடனடியாக கேந்தர் குட்டனை அருகில் உள்ள வனப்பகுதியில் தேடி இருக்கின்றனர். அப்போது கேந்தர் குட்டனின் பாதி உடல் மட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தோடர் பழங்குடியின மக்கள், உடனடியாக வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது இளைஞர் கேந்தர் குட்டனை புலி தாக்கியது கொன்றிருப்பது தெரிய வந்தது. இளைஞர் கேந்தர் குட்டனை கொன்ற புலி, அவரின் உடலை பாதி தின்றுவிட்டு சென்றிருக்கிறது. பாதி உடல் மட்டுமே கிடைத்திருப்பதால், மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், புலி இருப்பதை அறியாமல் சென்ற போது, இளைஞருக்கு இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. மேலும் புலி தாக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில நாட்களுக்கு முன்பாக உதகை அருகே பெண் ஒருவர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications