மனைவியை கொன்னுட்டாங்க... அவசர போலீசுக்கு வந்த போன் - காத்திருந்த அதிர்ச்சி
ஹலோ அவசர போலீஸ் நூறுங்களா... என் மனைவியை பலாத்காரம் செய்து கொண்டுட்டாங்க சார் என்று ஒருவர் போன் செய்து புகார் கொடுக்கவே பதறியடுத்துக்கொண்டு ஓடிய போலீசுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த ப
நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள இலகாபாஸ் கிராமத்தில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அவசரம் அவசரமாக போன் ஒன்று வந்தது. பதறியடித்துக்கொண்டு பேசிய ஒரு நபர், எனது மனைவியை பலாத்காரம் செய்து கொன்று விட்டார்கள் என்று கூறினார். அதைக்கேட்டு காவல்துறையினரும் அந்த கிராமத்திற்குப் போகவே செத்துப்போனதாக கூறப்பட்ட அந்தப்பெண் நலமாக நடமாடிக்கொண்டிருந்தார்.
அலோ அவசர போலீஸ் நூறுங்களா என்று கேட்டு போலீசை அலறவைத்த அந்த நபரின் பெயர் நரேஷ் சிங் என்பதாகும். 30 வயதாகும் அந்த நபர் இன்று அதிகாலை 5 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். காலையிலேயே போனை எடுத்தவர்களிடம் பதற்றமாக பேசிய நபர் தனது மனைவியை ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதாக கூறி புகார் அளித்தார்.

அதைக் கேட்டு அவசரம் அவசரமாக அந்த கிராமத்திற்கு ஒரு போலீஸ் படையே போனது. போன பின்னர்தான் தெரிந்தது அது பொய்யான போன் என்று தெரியவந்தது. சிலருக்கு எதிலெல்லாம் விளம்பரம் தேடுவது என்று இருக்காது. மனைவி இறந்து விட்டதாக கூறி விளம்பரம் தேடுகிறார்கள் பாருங்கள். காலங்காத்தால எங்களை அலைய விட வந்துட்டாண்டா என்று தலையில் அடித்துக்கொண்டனர்.
அப்புறம் என்ன அந்த நரேஷ் சிங்கை அள்ளிக்கொண்டு வந்தது போலீஸ். இந்திய தண்டனைச்சட்டம் 107, 116, 151 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications