நள்ளிரவில் கதறிய ஆஸ்திரேலிய பெண்.. பலாத்காரம் செய்த 5 பேர்.. ஒலிம்பிக்கிற்கு முன்பே அலறும் பாரிஸ்
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை மறுநாள் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் பாரிஸ் விழாகோலம் பூண்டுள்ள நிலையில் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண்ணை 5 பேர் கும்பல் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விளையாட்டு துறையில் பிரம்மாணட திருவிழா என்பது ஒலிம்பிக்காகும். இந்த ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 26)ம் தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கணைகள் பாரிசுக்கு சென்றுவிட்டனர். அதேபோல் பல நாடுகளில் இருந்து ரசிகர்களும் அங்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் தான் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பே பாரிஸில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 25 வயது நிரம்பிய ஆஸ்திரேலிய பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 20ம்தேதி நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாரிஸ் அருகே உள்ள வடக்கு பிகாலி மாவட்டத்துக்கு சென்றுள்ளார். இவர் கடந்த 19ம் தேதி அங்குள்ள மதுபான விடுதி மற்றும் கிளப்புக்கு சென்றார்.
அதன்பிறகு நள்ளிரவு 12 மணிக்கு (மறுநாள் ஜூலை 20ம் தேதி) பிறகு அவர் அங்கிருந்து வெளியே வந்துள்ளார். இந்த வேளையில் 5 பேர் அந்த பெண்ணை சூழ்ந்து கொண்டு தனியாக வரும்படி கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமான அந்த கும்பல் பெண்ணை தனியாக தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து தப்பிய இளம்பெண் ஆடைகள் கிழிந்த நிலையில் காலை 5 மணிக்கு அருகே உள்ள கபாப் கடைக்குள் சென்று உதவி கோரியுள்ளார்.
ஆடைகள் கிழிந்த நிலையில் அழுதபடி வந்த பெண்ணை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கண்கலங்கியபடி கூறியுள்ளார். இதற்கிடையே தான் அங்கு வந்த ஒரு நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோளில் தட்டியுள்ளார். அவர் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்தவர் என பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்ட அவரும் எஸ்கேப் ஆகினார்.
இதுபற்றி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி தன்னை பலாத்காரம் செய்த நபர்கள் பற்றிய சில முக்கிய விஷயங்களை அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி அந்த நபர்கள் பார்க்க ஆப்பிரிக்கர்கள் போன்று தோன்றியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பலாத்கார கும்பலிடம் இருந்து தப்பித்து வந்து காபாப் கடையில் அந்த பெண் தஞ்சமடைந்ததும், அப்போது பலாத்கார கும்பலை சேர்ந்த ஒருநபர் அங்கு வந்ததும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அந்த காட்சியை வைத்து போலீசார் பலாத்கார கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications