தலைக்கேறிய காமம்.. மனைவியின் ஆபாச வீடியோ.. 92 பேருடன் உறவு.. தாத்தாவுக்கு இது தேவையா? பரிதாப பாட்டி
பாரிஸ்: 71 வயது தாத்தாவுக்கு விரைவில் தண்டனை கிடைக்க போகிறது.. நாளைய தினம், வாக்குமூலம் ஒன்றை தரப்போகிறார்.. இதற்கு நீதிமன்றம் என்ன தண்டனை உத்தரவை தரப்போகிறது? என்ற ஆர்வம் எழுந்தபடியே உள்ளது.
பிரான்சை சேர்ந்த அந்த 71 வயது தாத்தாவின் பெயர் டொமினிகியூ.. 72 வயதாகும் மனைவி பெயர் கிசெல்.. இவருக்கு பாலில் தூக்க மாத்திரை, போதை மாத்திரை கலந்து தந்து குடிக்க வைத்துவிடுவாராம் தாத்தா.. கிசெல் பாட்டியும் அதை தெரியாமல், குடித்து மயக்கமாகி விழுந்துவிடுவாராம்.

பலாத்காரம்: உடனே, பாட்டியை பலாத்காரம் செய்வதற்கு ஆட்களை பெட்ரூமுக்குள் அனுப்பி வைப்பாராம்.. இதற்காக ஆன்லைனிலேயே ஆட்களை தேர்ந்தெடுத்து, மனைவியை பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். 26 வயது முதல் 74 வயதுள்ளவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுப்பாராம்.. இப்படியே 10 வருட காலமாக செய்து வந்துள்ளார். இதுவரை 72 பேர் 92 முறை பலாத்காரம் செய்திருக்கிறார்கள்..
வயதில் முதிர்ந்தவர் என்பதாலும், பாட்டியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாலும், தாத்தா மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை... இந்த தாத்தா ஒருநாள் ஷாப்பிங் போனாராம். அங்கு குட்டை பாவாடை அணிந்துகொண்டு வந்த பெண்ணை, கேமராவில் ஆபாசமாக வீடியோ எடுத்திருக்கிறார் தாத்தா. அப்போதுதான் அங்கிருந்த செக்யூரிட்டிகளிடம் தாத்தா வசமாக சிக்கிவிட்டார்..
சிக்கிய தாத்தா: அவரது செல்போனை வாங்கி பார்த்து அதிர்ந்தவர்கள், போலீசுக்கு போயிருக்கிறார்கள்.. இதற்குபிறகு லேப்டாப், கம்ப்யூட்டர்களை போலீசார் ஆய்வு செய்தபோதுதான், அவர்களுக்கே தூக்கி வாரிப்போட்டது. தன்னுடைய மனைவியை பலபேர் பலாத்காரம் செய்யும் வீடியோ, போட்டோக்களை, லேப்டாப்பில் தாத்தா சேமித்து வைத்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த டொமினிகியூ - கிசெல் தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 7 பேரக்குழந்தைகளும் உள்ளனர். தன்னுடைய கணவரை எப்போதுமே "சூப்பர் நபர்" என்று மனைவி புகழ்ந்து சொல்வாராம்.
ஆபாச வீடியோ: ஆனால், லேப்டாப், கம்ப்யூட்டரில் இருந்த ஆபாச வீடியோக்களை பாட்டியிடம் போலீசாரே காண்பித்துள்ளனர்.
கம்ப்யூட்டரில் 200-க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதைப்பார்த்ததுமே நடுநடுங்கி போனவர், கணவருக்கு எதிராக கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். பலாத்காரம் செய்தவர்களில் 50 பேரின் அடையாளம் மட்டுமே தற்போது காணப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பாட்டிக்காக வாதாடிய வழக்கறிஞர்"கிசெல்லுக்கு உடம்பு மோசமாகிவிட்டது. பலாத்காரம் செய்யும்போது தான் போதையில் இருப்பதை கூட அவரால் உணர முடியவில்லை.. அந்தளவிற்கு அதிகமான போதை மருந்து தந்திருக்கிறார்கள்.. கடந்த 10 வருடங்களாக அவரால் எதையுமே உணர முடியவில்லை. ஞாபக மறதியில் உள்ளார்.. சிகிச்சை அளித்தும் பயனில்லை" என்றார்.
எச்சரிக்கை: பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி துன்புறுத்துதல் போன்ற விசயங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று பாட்டி கோரிக்கை விடுத்துள்ளார். அவருடைய இந்த துணிச்சலை பாராட்டி நூற்றுக்கணக்கானோர் மார்சீல்லே நகரில் இருந்து பாரீஸ் நகர் வரை நேற்று பேரணியாக சென்று ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த கொடூர சம்பவத்தில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்ககூடும் என்கிறார்கள்.. தாத்தா உட்பட 18 பேர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.. மற்ற 32 பேர் வழக்கை எதிர்கொண்டு, கோர்ட்டுக்கு வந்து, சென்று கொண்டு இருக்கின்றனர்.. இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள். நாளை அதாவது 16ம் தேதி தாத்தா வாக்குமூலம் தரப்போகிறார்
வாக்குமூலம்: இந்த வழக்கில் டிசம்பர் 20ம் தேதி தீர்ப்பளிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் நாளைய தினம் இந்த வழக்கு தொடர்பாக தாத்தா, என்ன வாக்குமூலம் தரப்போகிறாரோ தெரியவில்லை.. சாட்சிகளிடமும் விசாரணை வாக்குமூலம் பதியப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த 71 வயசு தாத்தாவுக்கு இதெல்லாம் தேவையா?
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications