"நோ உடலுறவு" ஒலிம்பிக் கிராமத்தில் வெடித்த புது சர்ச்சை! கொந்தளிக்கும் இளம் வீரர்கள்- என்ன பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டிகள் இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கும் நிலையில், அங்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படுக்கைகள் சர்ச்சையாக வெடித்துள்ளன. அந்த படுக்கைகள் கார்ட் போர்ட்களில் செய்யப்பட்டுள்ள நிலையில், வீரர்- வீராங்கனைகள் நெருக்கமாக இருப்பதைத் தடுக்கவே இதுபோன்ற படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்கும் விளையாட்டுப் போட்டிகள் என்றால் அது ஒலிம்பிக் போட்டிகள் தான்.. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் உலகின் பல்வேறு நாடுகளும் கலந்து கொள்ளும்.

Olympics 2024 France sports 2024

ஒலிம்பிக்: ஒலிம்பிக் போட்டிகளின் பிரம்மாண்டம், வீரர்களின் திறன் எனப் பல விஷயங்கள் பேசுபொருள் ஆகும். ஆனால், இப்போது அங்கு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படுக்கைகள் தான் பேசுபொருள் ஆகி இருக்கிறது. ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்- வீராங்கனைகள் நெருக்கமாக இருப்பதைத் தடுக்கவே இந்த கார்ட்போர்ட் படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

முதன்முதலில் கடந்த 2020இல் நடந்த ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளில் தான் வீரர்களுக்கு இதுபோல கார்ட் போர்ட்களில் படுக்கைகள் வழங்கப்பட்டன. அப்போது தான் யாரோ ஒருவர், வீரர்கள் நெருக்கமாக இருப்பதைத் தடுக்கவே இந்த கார்ட் போர்ட் படுக்கைகள் வழங்கப்பட்டு இருப்பதாகக் கிளப்பிவிட்டார். அதுவே இதுபோன்ற தகவல்களுக்குக் காரணமாகும். அப்போது கொரோனாவும் இருந்த நிலையில், வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

வெடிக்கும் சர்ச்சை: இதற்கிடையே நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளிலும் இதே சர்ச்சை வெடித்துள்ளன. ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள் நெருக்கமாக இருப்பதைத் தடுக்கவே இந்த கார்ட் போர்ட் படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளன. இதற்கிடையே பல விளையாட்டு வீரர்கள் இது குறித்து வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய டென்னிஸ் நட்சத்திரங்களான டாரியா சவில்லே மற்றும் எலன் பெரெஸ் இந்த படுக்கைகளைச் சோதனை செய்தனர். அதாவது இந்த கார்ட் போர்ட் படுக்கைகள் மிகவும் லைட்டாக இருக்கும். இது இருவரது எடையைத் தாங்க முடியாது என்பதே பலரது கருத்து ஆனால் டாரியா சவில்லே மற்றும் எலன் பெரெஸ் இருவரும் இந்த படுக்கைகளில் பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்கிறார்கள்.

வலிமை தான்: ஆனாலும், அந்த படுக்கை எதுவுமே ஆகவில்லை வலுவாகவே இருக்கிறது. அதேபோல அயர்லாந்தை சேர்ந்த ஜிம்னாஸ்ட் வீரரும் படுக்கையில் பல உடற்பயிற்சிகளைச் செய்தார். அப்போதும் அது வலிமையாகவே இருந்துள்ளது என்பது இவர்கள் பகிர்ந்துள்ள வீடியோக்கள் மூலம் உறுதியாகின்றன.

சவுகரியம் இல்லை: இவை வலிமையாக இருந்தாலும் கூட வழக்கமான படுக்கைகளைப் போலச் சவுகரியமாக இல்லை என்று பலரும் புகார் அளித்துள்ளனர். ஒலிம்பிக் போன்ற போட்டிகளின் போது வீரர்களின் சவுகரியம் ரொம்பவே முக்கியம். நல்ல தூக்கம் மற்றும் ஓய்வு கிடைத்தால் மட்டுமே சிறப்பான பெர்ஃபாமன்ஸுகளை வெளிப்படுத்த முடியும். இருப்பினும், இந்த படுக்கைகள் சவுகரியமாக இல்லை என்பதே பலரது புகாராக இருக்கிறது. வரும் நாட்களில் இது மேலும் பெரிய சர்ச்சையாக வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது . இதில் இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+