"மனைவிக்கு மயக்க மருந்து.." 51 ஆண்களை பலாத்காரம் செய்ய வைத்த கணவர்! வீடியோவாக பதிவு செய்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் நபர் ஒருவர் தனது மனைவிக்கே மயக்க மருந்து கொடுத்து சுமார் 51 ஆண்களைப் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். மேலும், இந்த கொடூரத்தை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றம் உலகெங்கும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றம் என்பது சமீப காலங்களில் கணிசமாகவே அதிகரித்துள்ளது.

அப்படியொரு கொடூர சம்பவம் தான் இப்போது பிரான்சில் நடந்துள்ளது. அங்கு ஒருவர் தனது மனைவியையே மற்ற ஆண்களைப் பலாத்காரம் செய்ய அனுமதித்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

 Police nabbed a French Man for Drugging his wife and Recorded 51 Men Raping Her

பலாத்காரம்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர், தனது மனைவிக்குத் தினமும் இரவில் போதைப்பொருள் கொடுத்துவிடுவாராம். பின்னர் மயக்க நிலையில் இருக்கும், தனது மனைவியைப் பலாத்காரம் செய்ய இவரே மற்ற ஆண்களை வீட்டிற்குக் கூட்டி வந்துள்ளார். அந்த பெண் தனது கணவரை முழுமையாக நம்பியுள்ளார். இதனால் அவருக்கு இப்படியொரு சம்பவம் நடக்கிறது என்றே தெரியாதாம். இதைப் பயன்படுத்திக் கொண்ட அந்த கணவர் தொடர்ச்சியாக அத்துமீறியுள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு இதுபோல தனது மனைவியை மற்ற ஆண்களைப் பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். தீவிர விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு தெரிய வந்த தகவல்கள் பகீர் அளிப்பவையாகவே இருந்துள்ளது. மொத்தம் 92 முறை இப்படி தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 26 முதல் 73 வயதான 51 ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், கவுன்சிலர், வங்கியில் ஐடி ஊழியர்கள், காவலர்கள், செவிலியர் என 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களை அடையாளம் கண்டு கண்டுபிடிக்கும் நடவடிக்கையை எடுத்து வருவதாக அந்நாட்டு போலீசார் கூறியுள்ளனர்.

என்ன நடந்தது: டொமினிக் எனக் கூறப்படும் அந்த நபர் தனது மனைவியின் உணவில் லோராசெபம் என்ற மருந்தைக் கலந்துவிடுவாராம். இந்த மருந்தைச் சாப்பிட்டுக் கொஞ்ச நேரத்திலேயே அவர் மயங்கிவிடுவார். அவர் மயங்கியதை உறுதி செய்த பின்னர், டொமினிக் இவர்களை அழைப்பாராம். இது மட்டுமின்றி இந்த கொடூரத்தை அவர் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார்.

இந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார், அதை வைத்தே இப்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் 2011 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளது. இதில் பல ஆண்கள் அந்த பெண்ணை பல முறை பலாத்காரம் செய்துள்ளனர்.

கண்டிஷன்கள்: அந்த ஜோடிக்கு திருணமாகி 50 ஆண்டுகள் ஆகிறதாம். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் கூட இருக்கிறது. இதையெல்லாம் தாண்டியே அந்த நபர் இந்த கொடூர காரியத்தில் ஈடுபட்டுள்ளார். எந்த விதத்திலும் மாட்டாமல் இருக்க அவர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். தனது மனைவி மயக்கத்தில் இருந்து எழக் கூடாது என்பதற்காகப் புகையிலை மற்றும் வாசனைத் திரவியங்களைத் தடை செய்துள்ளார்.

 Police nabbed a French Man for Drugging his wife and Recorded 51 Men Raping Her

மேலும், வெளியே குளிரில் இருந்து வருவோரின் கைகள் ஜில் என இருக்கும் என்பதால் சூடான நீரில் கைகளையும் கழுவ வைத்துள்ளார். பெட் ரூமில் ஆடைகளைக் கழட்டக் கூடாது என்றும் சமையலறையிலேயே ஆடைகளை அகற்றச் சொல்லியுள்ளார். மேலும், வாகனங்களையும் வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது என்றும் சொல்லியுள்ளார். இதனால் அருகில் உள்ள பள்ளியில் வாகனங்களை நிறுத்திவிட்டு, இருட்டில் தான் நடந்து இவர்கள் வருவார்களாம்.

போலீஸ் அதிகாரிகள்: இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறுகையில், "இதில் அவரது மனைவிக்குச் சம்பந்தம் இல்லை என்பதைத் தெரியாது எனச் சிலர் தெரிவித்துள்ளனர். இதைப் பலாத்காரமாகச் சொல்ல முடியாது.. ஏனென்றால் அந்த பெண்ணுக்கு இதில் விருப்பம் இல்லை என்பதே எங்களுக்குத் தெரியாது எனச் சிலர் சொல்கிறார்கள். இது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

கடந்த 2020இல் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்த குற்றச்சாட்டில் டொமினிக்கை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது வீட்டில் நடந்த சோதனையில் தான் இந்த ஷாக் சம்பவம் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+