பாத்ரூமில் நடந்த கொடுமை.. அலறிய பிஞ்சுகள்.. ஹோலியில் நடுங்க வைத்த கொடூரன்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஹோலி கொண்டாட்டத்தின் போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஹோலி பண்டிகையின்போது 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்க ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச பெண்கள் தினத்தில் ஹோலி கொண்டாட்டம் என்கிற பெயரில் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்கள் அதிகளவில் நிகழ்த்தப்பட்டது என்பதுதான் இதில் வேதனையளிக்கும் விஷயமாக இருப்பதாக மகளிர் அமைப்புகள் கூறியுள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் இந்த கொண்டாட்டங்களுக்கு நடுவே சிக்கிய ஜப்பான் நாட்டை சேர்ந்த இளம்பெண் சந்தித்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு கலர் பவுடர் பூசப்பட்டிருக்கிறது. மேலும், அவரது தலையில் முட்டை உடைக்கப்பட்டு உடல் முழுவதும் ஒரு இடம் விடாமல் கலர் கலர் பவுடரை சிலர் பூசியுள்ளனர். இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கண்டனம் தெரிவித்துள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

மட்டுமல்லாது இதில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த காவல் துறையினருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் சிறார்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சி. இதனயைடுத்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த மூன்று சிறார்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லி மட்டுமல்லாது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புர்கா அணிந்து செல்லும் இஸ்லாமிய பெண்கள் மீது தண்ணீர் ஊற்றுவது, கலர் பவுடர் வீசுவது போன்ற அத்துமீறலில் சிலர் ஈடுபட்டிருக்கின்றனர்.

 வீடியோ

வீடியோ

இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை குறிப்பிட்டு சமூக ஆர்வலர்களும், மகளிர் அமைப்பினரும் இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பீகாரில் இதேபோல ஹோலி கொண்டாட்டத்தின்போது மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பீகார் மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சிறுமியும், உடன் 9 வயது தோழியும் கடைக்கு சென்றிருக்கிறார்கள்.

 சிறுமி

சிறுமி

பின்னர் வீடு திரும்பும் வழியில் தங்களது பள்ளியில் உள்ள ஊஞ்சலில் விளையாடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து பள்ளி மைதானத்திற்கு சென்றிருக்கிறார்கள். அன்று பள்ளி விடுமுறை என்பதால் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மக்கள் ஹோலி கொண்டாட்டத்தில் பிஸியாக இருந்திருக்கின்றனர். மைதானத்தில் தனிமையில் ஊஞ்சல் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளை பார்த்த நடுத்தர வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவரை அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

 பலாத்காரம்

பலாத்காரம்

அதேபோல சிறுமியின் தோழியான 9 வயதுடைய மற்றொரு சிறுமியையும் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதனையடுத்து சிறுமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அந்த நபரும் அச்சிறுமியை தூரத்திக்கொண்டு ஓடியிருக்கிறார். ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். ஹோலி அன்று சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+