மனைவியே இல்லையே! ‛உறுப்பையே’ வெட்டிக்கொண்ட 25 வயது இளைஞர்.. பரபரத்துபோன பீகார்..பின்னணியில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் 4 குழந்தைகளுக்கு தந்தையான 25 வயது இளைஞர் தனது மர்மஉறுப்பை திடீரென வெட்டிக்கொண்டு அலறி துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் அவர் எதற்காக இப்படி செய்தார்? என்பது பற்றிய ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

பீகார் மாநிலம் மாதேபுரா அருகே உள்ள ரஜினிநாயநகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரா. இவரது மகன் கிருஷ்ணா (வயது 25). அதேபோல் கோல்பாரா அருகே உள்ளசேட்டே லால் என்பவரின் மகன் அனிதா. இந்நிலையில் தான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 2 பேருக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் ஆன புதிதில் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர். இந்த தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள் பிறந்தன. இதில் 3 மகள்களும், ஒரு மகனும் அடங்குவர்.

தங்கி வேலை பார்க்கும் கணவர்

தங்கி வேலை பார்க்கும் கணவர்

கிருஷ்ணா, பஞ்சாபி மண்டியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் 2 மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் அடிக்கடி அனிதா தனது தாய் வீட்டுக்கு செல்வதும், கணவர் வரும்போது அவரது ஊருக்கு வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் கிருஷ்ணா வேலையை முடித்து சொந்த ஊர் திரும்பினார். அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லை. அவர் தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

 மர்மஉறுப்பை வெட்டினார்

மர்மஉறுப்பை வெட்டினார்

இதையடுத்து கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் அனிதாவை வரும்படி அழைத்துள்ளனர். இதற்கு அனிதா அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சிறிது காலம் கழித்து தான் வீட்டுக்கு வருவதாக அனிதா தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கிருஷ்ணா கூர்மையான பொருளை எடுத்து தனது மர்மஉறுப்பை வெட்டியுள்ளார். ரத்தம் வடிந்த நிலையில் அவர் அலறி துடித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் கிருஷ்ணா ஏன் இப்படி செய்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்நிலையில் தான் கிருஷ்ணா மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சிலர் தெரிவித்துள்னளர். இது இன்னும் உறுதியாகாத நிலையில் கிருஷ்ணாவுக்கு மனநல பிரச்சனை ஏதேனும் உள்ளதா? இல்லாவிட்டால் கணவர்-மனைவி இடையேயான தகராறில் அவர் மர்மஉறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றாரா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+