பீகாரில் பரபரப்பு-நிதிஷ் ஆட்சி கவிழும்? ஜேடியூ இரண்டாக உடைகிறது? 11 பேர் ரகசிய ஆலோசனை- பாஜக உஷார்!
பாட்னா: பீகார் மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியூ) இரண்டாக உடையக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ஜேடியூவின் 11 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இந்த பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் பாஜகவும் தமது எம்.எல்.ஏக்களை பாதுகாக்க பீகாரில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கிறதாம்.
பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் பாஜக மீது கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் நிதிஷ்குமார் திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டார். அத்துடன் யாருமே எதிர்பார்க்காத வகையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியையும் அமைத்து முதல்வராக நீடித்து வருகிறார் நிதிஷ்குமார்.

மேலும் லோக்சபா தேர்தலுக்காக 28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணியை நிதிஷ்குமார் உருவாக்கினார். இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றன. ஆனால் "இந்தியா" கூட்டணி இப்போது காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவி கனவில் இருந்த நிதிஷ்குமார் அவை கிடைக்காத நிலையில் கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்த பின்னணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியூ) தேசிய கவுன்சில் கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது. முன்னதாக ஜேடியூ அகில இந்திய தலைவர் லாலன்சிங்கை பதவி விலக சொன்னார் நிதிஷ்குமார். இதனால் லாலன் சிங் தமது பதவியை ராஜினாமா செய்து நிதிஷ்குமாருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். ஜேடியூவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், 'இந்தியா' கூட்டணியை விட்டு விலகும் முடிவை நிதிஷ்குமார் அறிவிக்கலாம் என யூகங்கள் வலம் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் பீகாரில் திடீரென நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி 11 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர். இதனால் ஜேடியூ கட்சி இரண்டாக உடையக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக பீகார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நிதிஷ்குமார் இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் பல முக்கிய தலைவர்களையும் நிதிஷ்குமார் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து அதிரடியான முடிவுகளை வெளியிடக் கூடிய சாத்தியங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய அசாதரண சூழ்நிலைகளால் பீகாரில் பாஜக தமது எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகிறது. பீகார் பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் பாதுகாப்பாக உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்புவதற்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம். இதனால் பீகார் அரசியலிலும் தேசிய அரசியலிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications