பீகாரில் அடித்து தூக்கும் மோடி-நிதிஷ்.. ஆர்ஜேடி-காங். நிலை பரிதாபம்! Dainik Bhaskar எக்ஸிட் போல்
பாட்னா: பீகார் மாநிலத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், இப்போது அங்கு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே அங்கு என்டிஏ வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணிக்கு மிக மோசமான தோல்வி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி, தேஜஸ்வி தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. இதுபோக பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சியும் தனித்துக் களமிறங்குவதால் அங்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அங்கு மொத்தம் 243 தொகுதிகள் இருக்கும் நிலையில், ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தபட்சம் 122 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்த முறை என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணி இடையே இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதற்கிடையே இன்று தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போலில் பீகாரில் என்டிஏ ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி 145- 160 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு என டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 2020 தேர்தலில் என்டிஏ 125 இடங்களைப் பெற்றிருந்தது. இந்த முறை 20 முதல் 35 இடங்கள் கூடுதலாகப் பெற்று, அதன் பலம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கட்சி அடிப்படையில் பார்க்கும்போது நிதிஷின் ஜேடியு 2020-ல் 43 இடங்களைப் பெற்ற நிலையில், இந்த முறை 59 முதல் 68 இடங்களைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது 16 முதல் 25 இடங்கள் அதிகமாகப் பெறும் எனத் தெரிகிறது. பாஜக கடந்த 2020ல் 74 இடங்களைப் பெற்றிருந்தது. இந்த முறை 72 முதல் 82 இடங்களைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிராக் பாஸ்வானின் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டாலும், 4 முதல் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என டைனிக் பாஸ்கர் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.. ஹெச்ஏஎம் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு, 4-5 தொகுதிகளிலும் ஆர்எல்எம் கட்சிக்கு எங்கும் வெல்லாது என்றும் டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன.
மறுபுறம் இந்தியா கூட்டணி 73-91 இடங்களில் மட்டுமே வெல்லும் என டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. 2020 தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி 110 இடங்களைப் பெற்ற நிலையில், இந்த முறை 19 முதல் 37 இடங்கள் வரை குறைவாகப் போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக ஆர்ஜேடி கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படக்கூடும். 2020ல் 75 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், இந்த முறை 12 முதல் 24 இடங்கள் குறையலாம். காங்கிரஸ் கட்சி 59 தொகுதிகளில் போட்டியிட்டு, 12 முதல் 15 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் சூழல் இருப்பதாக டைனிக் பாஸ்கர் தெரிவிக்கிறது. காங்கிரஸ் 2020-ல் 19 இடங்களை வென்றிருந்தது.
முகேஷ் சாஹ்னியின் VIP கட்சி 13 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பில்லை என டைனிக் பாஸ்கர் கூறியுள்ளது. இடதுசாரி கட்சிகளில், CPI-ML கட்சி கடந்த முறை 12 இடங்களைப் பெற்ற நிலையில், இந்த முறை 6 முதல் 9 இடங்களை மட்டுமே பெறும். சிபிஐ 2 இடங்களிலும், சிபிஎம் ஒரு இடத்திலும் வெல்லும் என்று டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல் கூறுகிறது. அதேபோல ஐஐபி ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்புள்ளதாக டைனிக் பாஸ்கர் கூறியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications