பீகார் தேர்தல்: நிதிஷ்குமார் கூட்டணி ஆதிக்கம்! திணறும் தேஜஸ்வி யாதவ்! வாக்கு எண்ணிக்கையில் ட்விஸ்ட்
பாட்னா: பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கும் நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணிக்கையில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 132 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 66 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

அதேபோல மின்னணு வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் என்டிஏ கூட்டணி 41 இடங்களிலும், மாகபந்தன் கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பாஜக 21 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், ராம் விலாஸ் பஸ்வானின் LJPRV கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. அதேபோல ஆர்ஜேடி 8, காங்கிரஸ் 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் 1 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 122 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியை அமைக்கலாம். கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை அதிக அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர். வழக்கமாக வாக்கு எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் என்கிற கணிப்பு இருக்கிறது. எனவே தேஜஸ்வி யாதவ் குஷியாக இருக்கிறார்.
தேஜஸ்வி யாதவை முதல்வராக முன்னிறுத்தி ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியான மகாபந்தன் கூட்டணியும், நிதிஷ்குமாரை முதல்வராக முன்னிறுத்தி பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் என்டிஏ கூட்டணியும், தனியாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் கிராண்ட் டெமாக்ரடிக் கூட்டணியும் களத்தில் இருக்கின்றன.
கடந்த முறையை விட இந்த முறை அதிகமான வாக்காளர்கள் வாக்களித்திருக்கும் நிலையில், வெற்றி நிச்சயம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications