Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுடச்சுட ஜிலேபி ரெடி.. பீகார் வெற்றியை கொண்டாட காலையிலேயே தயாராக இருக்கும் பாஜக.. உற்சாகம்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இப்போது வாக்கு எண்ணிக்கை அங்குத் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே இன்று நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக இருக்கும் நிலையில், அங்குக் கட்சி அலுவலகத்தில் சுடச்சுட இனிப்புகள் ரெடியாகி வருகிறது. வெற்றியைக் கொண்டாடப் பல வகை இனிப்புகளுடன் பாஜக தயாராகி வருகிறது.

நமது நாட்டில் இந்தி ஹார்ட்லேண்டில் பிரதான மாநிலமாக உள்ள பீகாரில் இந்தாண்டு இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த நவம்பர் 6ம் தேதி 121 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில், நவம்பர் 11ம் தேதி 122 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அமைதியான முறையிலேயே அங்குத் தேர்தல் நடந்து முடிந்தது.

Bihar Election 2025 2025 BJP Bihar Election Results 2025 2025

பீகார் வாக்கு எண்ணிக்கை

பீகாரில் இந்த முறை 66.91% வாக்குகள் பதிவாகி இருந்தது. பீகார் மாநில வரலாற்றில் இதுவரை இத்தனை சதவிகித வாக்குகள் பதிவானதே இல்லை. முதற்கட்டத் தேர்தலில் பீகாரில் 65.08% வாக்குகள் பதிவாகி இருந்தது. இரண்டாம் கட்டத்தில் அதை விட அதிகமாக 68.71% வாக்குள் பதிவானது. சராசரியாக அங்கு 66.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது கடந்த 2020 தேர்தலைக் காட்டிலும் பீகாரில் 9.62% வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளது.

இந்தச் சூழலில் தான் இன்றைய நிலையில், பீகாரில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட எல்லா எக்ஸிட் போல்களிலும் என்டிஏ கூட்டணியே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளதால், பாஜக தரப்பு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால் இன்றைய தினம் தேர்தல் வெற்றியைக் கொண்டாட பாஜக காலையிலேயே ரெடியாக ஆரம்பித்துவிட்டது.

ரெடியாகும் இனிப்புகள்

பாஜகவின் பீகார் கட்சி அலுவலகத்திற்குக் காலை முதலே தொண்டர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். தொண்டர்கள் பெரும் உற்சாகத்தோடு பாஜக அலுவலகத்தில் திரண்டுள்ளனர். இன்றைய வெற்றியைக் கொண்டாட இனிப்புகளும் அங்குத் தயாராகி வருகிறது. சுடச்சுட ஜிலேபி மற்றும் பீகார் பாரம்பரிய இனிப்புகளை அங்கு அலுவலகத்தில் வைத்தே பாஜகவினர் ரெடி செய்கிறார்கள். அவர்கள் முகத்திலும் நம்மால் உற்சாகத்தைப் பார்க்க முடிகிறது.

Bihar Election 2025 2025 BJP Bihar Election Results 2025 2025

காங்கிரஸ்

மறுபுறம் காங்கிரஸ் அலுவலகத்தைப் பொறுத்தவரை அங்கு இப்போது தான் தொண்டர்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதுவரை பெரிய தலைவர்கள் யாரும் அங்கு வரவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் முகத்திலும் நம்பிக்கை தெரிந்தாலும் கூட, அந்த உற்சாகம் முழுமையாக இல்லை என்பதே உண்மை. இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் டிரெண்ட் தெரிந்துவிடும் நிலையில், அப்போது எந்தக் கட்சி கொண்டாட்டத்தில் திளைக்கப் போகிறது என்பதும் தெரிந்துவிடும்.

பீகார்

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. அங்கு எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியை அமைக்கக் குறைந்தபட்சம் 122 இடங்களை வெல்ல வேண்டும். அங்கு இப்போது 3 முனைப் போட்டி நிலவுகிறது. ஒரு பக்கம் என்டிஏ கூட்டணி, அதில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஜேடியு பிரதானக் கட்சிகளாக உள்ளன. மறுபுறம் இந்தியா கூட்டணியில் ஆர்ஜேடி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் பிரதானக் கட்சிகளாக உள்ளன.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஆரம்பித்துள்ள நிலையில், இன்று பிற்பகலுக்குள் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது தெளிவாகவே தெரிந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+