தாலி கட்டும் நேரத்தில் ஷாக்! மயங்கி விழுந்த மாப்பிள்ளை பலி, கதறி துடித்த மணப்பெண்
பாட்னா: இனிமேல் வாழ்க்கை முழுக்க நீ தான், உன் துணைக்கு நான் தான், என் துணைக்கு நீ தான் என்று சந்தோஷமாக பெண் கழுத்தில் தாலி கட்டப்போகும் நேரத்தில், மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
பீகாரின் பாகல்பூரில் ஒரு கல்யாண வீடு கடைசியில் இறப்பு வீடாக மாறி இருக்கிறது. கான்ஜர்பூரைச் சேர்ந்த என்ஜினியரான வினீத்குமார் (30 வயது) என்பவருக்கும், ஜார்க்கண்ட் மாநிலம் ஆயுஷி (25 வயது) என்பவருக்கும் கடந்த புதன்கிழமை இரவு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் சடங்குகள் முடிய தாமதம் ஆகி இருக்கிறது. அதனால் வியாழக்கிமை இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக தள்ளி வைத்துள்ளார்கள். விடியற்காலை திருமண சடங்குகள் முடிந்து காலை 8 மணிக்கு தாலி கட்டப்போகும் நேரத்தில் மாப்பிள்ளைக்கு நெஞ்சுவலி வந்துள்ளது.
அப்போது என்ன நடந்தது என்றால் மாப்பிள்ளை வினீத் ஒரு சேரில் உட்கார்ந்துள்ளார். அப்போது மாப்பிள்ளைக்கு அவரது மாமனார் டீ கொண்டு வந்துள்ளார். அப்போது திடீரென அவரது கண் முன்னே வினீத் தரையில் சரிந்து விழுந்தார்.
இதனை பார்த்த இரு வீட்டாரும் மாப்பிள்ளையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கொஞ்சம் முன்பாகவே கூட்டிவந்திருக்கலாம், சாரி அவர் இறந்துவிட்டார் என்று கூறி கைவிரித்துவிட்டனர். இதை பார்த்து மணப்பெண் ஆயுஷ் மயங்கி விழுந்தார்.

பின்னர் சுயநினைவுக்கு வந்த பிறகு, நீ என்கூட வாழப்போகிறாய் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நீ இல்லை. அப்புறம் ஏன் வாழ்க்கையில் வந்தாய் என்று மணப்பெண் கதறி அழுதுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் கண்கலங்கி போனார்கள்.
இதற்கு பின்னர் போலீசார் நேரில் வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேள தாளத்துடன் திருமணத்தை கொண்டாடிக் கொண்டிருந்த திருமண வீட்டார் மத்தியில் மாப்பிள்ளை இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணப்பெண் மற்றும் மொத்த குடும்பத்தினரும் மனம் உடைந்து போயினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications