Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீகார் தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றால் நாட்டின் முதலாவது இளம் வயது முதல்வர் தேஜஸ்வி யாதவ்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றால் மாநிலங்களில் முதலாவது இளம் வயது முதல்வர் என்ற பெருமையைப் பெறுவார் தேஜஸ்வி யாதவ்.

பீகாரில் 243 தொகுதிகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இறுதிகட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

Bihar: Tejashwi to become youngest CM of a state

இந்த முடிவுகள் பெரும்பாலும், ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவே வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளன. அனைத்து முடிவுகளையும் ஒப்பிட்டால் சராசரியாக 133 இடங்களில் ஆர்ஜேடி-காங்-இடதுசாரிகள் அணி வெல்லக் கூடும். பீகாரில் 122 இடங்கள்தான் பெரும்பான்மைக்கு தேவை.

அப்படி ஆர்ஜேடி - காங்கிரஸ்- இடதுசாரி அணி வெற்றி பெற்றால் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகாரின் முதல்வராவார். நாட்டின் மாநிலங்களில் முதல் முறையாக இளம் வயதில் அதாவது 31 வயதில் முதல்வராகும் பெருமைக்குரியவராவார் தேஜஸ்வி யாதவ்.

1967-ல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வராக 29 வயதில் பதவி ஏற்றார் எம்.ஓ.எச். பரூக். அது யூனியன் பிரதேசம். மாநிலங்களில் பீகாரில் 1968-ல் 32 வயதில் முதல்வரானார் சதீஷ் பிரசாத் சிங். பின்னர் 1975-ல் பீகார் முதல்வராக 35 வயதில் பதவியேற்றார் ஜெகநாத் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+