நிதிஷ் குமாரிடம் பவரை காட்டிய பாஜக.. பீகாரில் என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு?
பாட்னா: பீகாரில் நேற்று இரவு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், பாஜக 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பீகாரில் கூட்டணியை இறுதி செய்ய பாஜக என்டிஏ கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. பீகாரை பொறுத்தவரை நிதிஷ் குமார் அண்மையில் தான் பாஜக கூட்டணிக்கு திரும்பினார். இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், கூட்டணியை விட்டு வெளியேறி ஷாக் கொடுத்தார்.

அதேவேகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பீகார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவிடமே மீண்டும் நிதிஷ் சரண்டர் ஆனதால், இந்த முறை தொகுதி பங்கீட்டில் பாஜக கறார் காட்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதேபோல ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட ஒரு இடத்தில் கூடுதலாக பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 நாட்களாக பேச்சுவார்த்தை: பீகாரில் நேற்று இரவு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. சிராக் பாஸ்வானிடம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பாஜக பேசி வந்த நிலையில், 5 சீட்களில் அவரது கட்சிக்கு ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாம்.
17 இடங்களில் பாஜக: இதன்படி, பீகாரில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 17 இடங்களில் பாஜக போட்டியிட உள்ளது. நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், சிராக் பாஸ்வானின் எல்ஜேபி 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல உபேந்திர குஷ்வாஹா மற்றும் ஜித்தன் ராம் மாஞ்சியின் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. தொகுதிபங்கீடு முடிந்துவிட்டதாகவும் விரைவில் இது தொடர்பாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பீகார் பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
கடந்த 2019- லோக்சபா தேர்தலில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டன. லோக் ஜனசக்தி 6 தொகுதிகளில் போட்டியிருந்தது. பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்று இருந்தது.
தொகுதி பங்கீட்டில் மும்முரம்: லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ளதால், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக வேட்பாளர் பட்டியலை வெளியிட துவங்கியுள்ளன.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு முடிந்த மாநிலங்களில் வேட்பாளர்களை பாஜக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னமும் கூட்டணியே இறுதியாகவில்லை. இதனால், விரைவில் கூட்டணியை இறுதி செய்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க பாஜக தயாராகி வருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications