பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகாரை கைப்பற்ற முதலில் ஜேடியூ.. அடுத்த டார்கெட் ஆர்ஜேடி- கணக்குப் போட்டு காத்திருக்கும் பாஜக!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தை எப்படியாவது கைப்பற்றுவது என்பதற்கான வியூகங்களுடன் தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது பாஜக.

வட இந்தியாவில் பீகாரில் மட்டும்தான் பாஜகவால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடியவில்லை. இதற்கு தடையாக இருப்பவை நிதிஷ்குமாரின் ஜேடியூ, தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி.

இந்த இரு கட்சிகளை கலகலக்க வைத்து ஆட்டத்தில் இருந்து வெளியேற்றுவதன் மூலம்தான் பீகார் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பது பாஜகவின் கணக்கு. இந்த தேர்தலில் முதலில் நிதிஷ்குமாரின் ஜேடியூவுக்கு குறிவைத்திருக்கிறது பாஜக.

2 ஆண்டுகள்- 8 மாநிலங்கள், 218 இடைத்தேர்தல்களில் தோல்வி...பீகாரில் என்ன ஆகுமோ? பதற்றத்தில் பாஜக 2 ஆண்டுகள்- 8 மாநிலங்கள், 218 இடைத்தேர்தல்களில் தோல்வி...பீகாரில் என்ன ஆகுமோ? பதற்றத்தில் பாஜக

துருப்புச் சீட்டு

துருப்புச் சீட்டு

பாஜகவின் கூட்டணி கட்சியாகவே ஜேடியூ இருந்தபோதும் அந்த கட்சி அதிக இடங்களில் வென்றுவிடாமல் அதன் சகாப்தத்தை முடிவுக்கு வர வேண்டும் என நினைத்தது பாஜக. இதற்கான துருப்புச் சீட்டாக லோக் ஜனசக்தியின் சிராக் பாஸ்வானை பயன்படுத்தியது.

ஜேடியூவுக்கு எதிராக எல்ஜேபி

ஜேடியூவுக்கு எதிராக எல்ஜேபி

டெல்லியில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் லோக் ஜனசக்தி, பீகாரில் பாஜக அணியில் இடம்பெறவில்லை. அதுவும் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவை மட்டும் பீகார் தேர்தலில் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியது. எத்தனையோ முறை ஜேடியூ கூப்பாடு போட்டும் பாஜக, சிராக் பாஸ்வானை கண்டுகொள்ளவில்லை.

ஜேடியூ சகாப்தம் முடிவுக்கு வருகிறது?

ஜேடியூ சகாப்தம் முடிவுக்கு வருகிறது?

ஏனெனில் சிராக் பாஸ்வானே பாஜகவின் பி டீம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஜேடியூவின் வெற்றியை சிதைக்கவே சிராக் பாஸ்வானின் லோக்ஜனசக்தியை பாஜக பயன்படுத்தியது. எக்ஸிட் போல் முடிவுகளும் பாஜகவின் இந்த வியூகம் கை கொடுக்கும் என்கிற வகையில்தான் கணிப்புகளை தெரிவித்திருந்தன. இந்த தேர்தலில் ஜேடியூவின் கதையை முடிக்காமல் பாஜக ஓயாது.

Recommended Video

    Bihar-ல் ஆட்சியை தீர்மானிக்குமா இந்த 0.39% வாக்குகள்? | Oneindia Tamil
    அடுத்த டார்கெட் ஆர்ஜேடி

    அடுத்த டார்கெட் ஆர்ஜேடி

    அதன்பின்னர் ஆர்ஜேடிதான். என்னதான் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சியை பாஜக நிலைக்கவிடாது என்றே தெரிகிறது. கர்நாடகா, மத்திய பிரதேச பார்முலாக்களின் அடிப்படையில் ஆர்ஜேடியை உடைத்து அந்த கட்சியை பாஜக சின்னாபின்னமாக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    According to the Past Poll Records BJP's First Target JDU, Next RJD in Bihar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X