பீகாரில் தொங்கு சட்டசபை உருவானால் சிராக் பாஸ்வான் 'கிங் மேக்கர்'?
பாட்னா: பீகாரில் தொங்கு சட்டசபை உருவானால் லோக் ஜனசக்தித் தலைவர் சிராக் பாஸ்வான் கிங் மேக்கராக உருவாகலாம் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் ஆர்ஜேடி-காங். கூட்டணி அரசு அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்பிருப்பதாகவும் சில எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
243 இடங்களைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கும், ஜேடியூ-பாஜக கூட்டணிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு ஒரு சில இடங்கள் தேவைப்படும் நிலைமை உருவாகலாம் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
அப்படி ஒரு நிலை உருவானால் 1 முதல் அதிகபட்சம் 8 இடங்களைப் பெறலாம் என கணிக்கப்படும் லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான் கிங் மேக்கராகும் நிலைமை உருவாகும். ஜேடியூவை எதிர்த்து போட்டியிட்டு நிதிஷ்குமாரின் சகாப்தத்தையே காலி செய்யும் முடிவில் களமாடியவர் சிராக் பாஸ்வான்.
அதேநேரத்தில் பாஜக ஆட்சி அமைக்க உதவுவேன் எனவும் கூறியிருக்கிறார். ஆகையால் மீண்டும் ஜேடியூ-பாஜக அணிக்கே சிராக் பாஸ்வான் ஆதரவு தருவாரா? அல்லது ஆர்ஜேடி-காங்-இடதுசாரிகளுக்கு ஆதரவை தெரிவிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் பீகாரில் நிலவுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications