நிதிஷ் - பாஜக ஜெயிச்சது இப்படித்தான்.. பீகார் தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் - பாஜக கூட்டணி, தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி களத்தில் மோதிக் கொண்டிருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறார்கள். இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கே முன்பே மோசமான ஆடுகளம் அமைப்பதை போல, ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு தேர்தலை நடத்தியிருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. தேர்தலை ஒட்டி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகார் தேர்தல்
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பீகாரில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அங்கு கடந்த நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும், நவம்பர் 11 ஆம் தேதி 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. கடந்த 75 வருட பீகார் அரசியலில் இல்லாதளவுக்கு 66.91 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கவும், மறுபக்கம் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர்.
மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி
பீகாரில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கும். தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நிதிஷ் - பாஜக கூட்டணியே மீண்டும் அரியணை ஏறும் என்று கூறப்பட்டது. அதை போலவே வாக்கு எண்ணிக்கையில் நிதிஷ் - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள்.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையைவிட சுமார் 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆர்ஜேடி வாக்கு சதவீத அடிப்படையில் (23 சதவீதம்) மற்ற கட்சிகளை விட முன்னிலையில் இருந்தாலும், அவர்களின் கூட்டணி சுமார் 50 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறார்கள்.
கியாரே செட்டிங்கா
இதன்மூலம் பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தன் எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு, அதிலும் பெரும்பான்மையான எதிர்க்கட்சி வாக்காளர்களை நீக்கிவிட்டு தேர்தல் முடிவுகளில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
போட்டி தொடங்குவதற்கு முன்பே இதுபோன்ற ஆடுகளத்தை தயார் செய்தால், ஜனநாயகம் நசுங்கிவிடும். என்றார். காங்கிரஸ் கட்சியின் மற்றொரு நிர்வாகி உதித் ராஜ், இது வாக்காளர்கள் கொடுத்த வெற்றி இல்லை. தேர்தல் ஆணையம் மற்றும் SIR மூலமாக கிடைக்க பெற்ற வெற்றி. இது ஜனநாயக படுகொலை." என்று கூறியுள்ளார்.
பாஜக மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக நிர்வாகி அருண்குமார், "பீகார் மக்கள் இந்தியா கூட்டணியை விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தோல்வி விரக்தியில் இதுபோன்ற கருத்துகளை கூறி வருகிறார்கள். பீகார் மக்கள் முன்னேற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்." என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications